நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்தபடி தென்னாபிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 227 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்போது ரோஹித் சர்மா 144 பந்துகளில் 122 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ரோஹித்தின் சதத்துடன் இந்தியாவுக்கு முதல் வெற்றி
உலகக் கிண்ணத்தின் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி..
அத்துடன், தனது 23ஆவது ஒருநாள் சதத்தையும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 2ஆவது சதத்தையும் பூர்த்தி செய்த ரோஹித் சர்மா, அதிக சதங்களைக் குவித்த சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, இந்தப் போட்டியின் மூலம் உலகக் கிண்ணத் தொடரில் ஒருசில சாதனைகளை ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து டோனியும் முறியடித்திருந்தார்.
கங்குலியின் சாதனை முறியடிப்பு
நேற்று நடைபெற்ற போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா, ஒருநாள் அரங்கில் இந்தியா சார்பாக அதிக சதங்கள் அடித்த வீரர்களில் சௌரவ் கங்குலியை (22), முந்தி 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்திலும், விராட் கோஹ்லி 41 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
டி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா?
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்..
இரட்டை சத சாதனை
உலகளவில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா தற்போது 9ஆவது இடத்தில் உள்ளார். அதே சமயம், ரோஹித் அடித்த 23 சதங்களில், மூன்று இரட்டைச் சதங்களும் அடங்கும். அவரது இரட்டை சத எண்ணிக்கையை இதுவரை எந்தவொரு வீரரும் முறியடிக்கவில்லை.
அதிக ஓட்டங்கள்
உலகக் கிண்ணத் தொடரில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை ரோஹித் சர்மா பெற்றுக் கொண்டார். இதற்குமுன் சச்சின் 127 ஓட்டங்கள் அடித்ததே முன்பு அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. தற்போது ரோஹித் சர்மா 122 ஓட்டங்களை அடித்துள்ளார்.
12, 000 ஓட்டங்கள்
இந்தப் போட்டியில் 122 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், 12,000 சர்வதேச ஓட்டங்களை ரோஹித் சர்மா கடந்தார். இதன்மூலம், இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 9ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, டோனி, விராட் கோஹ்லி, விரேந்திர சேவாக், மொஹமட் அசாருதீன் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
அத்துடன், விராட் கோஹ்லியின் தலைமையில் 3000 ஓட்டங்களைக் கடந்து வீரர் என்ற மற்றுமொரு சாதனையையும் அவர் படைத்தார்.
டோனிக்கு முதலிடம்
உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகளைச் செய்த வீரர்களில் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கலத்தை (32), முந்தி 3ஆவது இடத்தை டோனி பெற்றுக் கொண்டார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார (54), அவுஸ்திரேலியாவின் அடெம் கில்கிறிஸ்ட் (52) ஆகியோர் முறையே முதலிரண்டு இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, லிஸ்ட் ஏ போட்டிகளுடன் சேர்த்து (உள்ளூர் ஒருநாள் போட்டிகள், சர்வதேச ஒருநாள் போட்டிகள்) டோனி இந்த ஸ்டம்பிங்குடன் 139 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். இதன்மூலம் உலக அளவில் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் வரிசையில், பாகிஸ்தானின் மொயின் கானுடன் டோனி முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, சர்வதேசப் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ்களில் (600) விக்கெட் காப்பாளராக இருந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் டோனி பெற்றுக் கொண்டார்.
இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் மார்க் பவுச்சர் (596 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்தையும், இலங்கையின் குமார் சங்கக்கார (499) மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<