தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று

174
South Africa Cricket
BCCI

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 வைரஸ்  தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை (CSA) உறுதி செய்துள்ளது. 

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்த விஷேட பாசறை ஒன்றில் பங்கேற்ற இரண்டு வீரர்களே தற்போது கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 

ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் மஹேல ஜயவர்தன

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான இந்த இரண்டு வீரர்களுக்கும் அறிகுறிகள் எதுவும் தென்படாத போதும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

அதேநேரம், கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான வீரர்களை பாசறையில் வேறு வீரர்கள் கொண்டு பிரதியீடு செய்யப்போவதில்லை என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

”(கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான) இரண்டு வீரர்களுக்கும் (கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான) அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் மருத்துவக் குழு வீரர்களின் உடல்நிலையினை அவதானித்து அவர்களுக்கு தொடர்ந்தும் உதவியாக இருக்கும்.” 

”(மேலும்) இந்த இந்த இரண்டு வீரர்களுக்குமான பிரதியீட்டு வீரர்களும் தெரிவு செய்யப்படமாட்டார்கள். இந்த பாசறையில் பங்கேற்க சந்தர்ப்பம் பெறாத வீரர்கள் டிஜிடல் ஊடகங்கள் மூலமாக பாசறையில் கற்பிக்கப்படும் விடயங்களை கற்றுக்கொள்ள முடியும். (அதேநேரம் பாசறையில்) வைரஸ் பரவுவதனை தடுக்க (தென்னாபிரிக்க கிரிக்கெட்) சபையின் விதிமுறைகளுக்கு அமைய பரிசோதனைகளும் கிரமமாக மேற்கொள்ளப்படும்” என இந்த வீரர்கள் தொடர்பில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேநேரம், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அவர்களின் நாட்டு சட்டத்துக்கு அமைவாக கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான குறித்த வீரர்கள் இருவரினதும் பெயர் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியுடன் மார்க் கோல்ஸ்

இந்த விஷேட பாசறை தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு கலாச்சார விடயங்கள் குறித்து கற்பிப்பதற்காக, அந்நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க