ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் மஹேல ஜயவர்தன

687

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தனது பயிற்றுவிப்புக் கடமைகளினை பொறுப்பேற்க இன்று (21) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகியுள்ளார். 

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியுடன் மார்க் கோல்ஸ்

இந்த ஆண்டின் மார்ச் மாதம் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறாது போன 13ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.  

இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் அணிகள் ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாக ஆரம்பித்துள்ள நிலையிலேயே, மும்பை இந்தியன்ஸ் அணியினை பயிற்றுவிக்கும் மஹேல ஜயவர்தனவும் ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகியுள்ளார். 

அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகியுள்ள மஹேல ஜயவர்தன, இந்த ஆண்டு நான்காவது தடவையாக மும்பை இந்தியன்ஸ் அணியினை பயிற்றுவிக்கவுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து மஹேலவின் ஆளுகைக்குள் வந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Video – மாலிங்க, இசுரு IPL ஆடுவாங்களா?|Sports RoundUp – Epi 126

இதேநேரம், ஐ.பி.எல். தொடரில் விளையாடும் ஏனைய அணிகளில் ஒன்றான சன்ரைஸர்ஸ் ஹைதாரபாத் அணியின் பந்துவீச்சு ஆலோசகரான இலங்கையின் முன்னாள் சுழல் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் செப்டம்பர் 04ஆம் திகதி தனது கடமைகளினை பொறுப்பேற்க ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க