இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில், முன்னாள் வீரர்களான ஹேமந்த தேவப்பிரிய மற்றம் ரன்ஜித் மதுரசிங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு முன்னர் பிரமோதய விக்ரமசிங்க தலைமையில் ஆறு பேர் அடங்கிய தேர்வுக்குழுவை அறிவித்திருந்தது. இந்த குழாத்தில், ரொமேஷ் களுவிதாரன, ஹேமந்த விக்ரமசிங்க, வருன வராகொட, உவைசல் கர்னைன் மற்றும் திலக குணரத்ன ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
தற்போது ஆறு பேர் கொண்ட இந்த குழாம் 8 பேர் அடங்கிய குழாமாக மாறியுள்ளது. மேற்குறித்த இருவரும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுக்குழுவிலும் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழு பல்வேறு மாற்றங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக அனுபவ வீரர்களை அணியிலிருந்து நீக்கி, இளம் வீரர்களுடன் அணியை அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில், இளம் வீரர்கள் இணைக்கப்பட்டதுடன், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கும் இளம் வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…