ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் இணையும் இங்கிலாந்து, தென்னாபிரிக்க வீரர்கள்!

421

லங்கா ப்ரீமியர் லீக்கின், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர்களான ரவி பொப்பாரா மற்றும் டொம் மொரிஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், தென்னாபிரிக்க அணியின் கெயல்  அபோட் மற்றும் டுன்னே ஒலிவீர் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் 19ம் திகதி நடைபெற்றது. இந்த ஏலத்தின் போது, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி 4 வெளிநாட்டு வீரர்களை அணியில் இணைத்திருந்தார்.

மொரிஷியஸ் T10 லீக் தொடரில் களமிறங்கும் இலங்கை வீரர்கள்

எனினும், தேசிய அணிக்கான போட்டிகள் மற்றும் வேலைப்பளு காரணமாக டேவிட் மலன் மற்றும் ஆசிப் அலி ஆகியோர் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இந்தநிலையில் தங்களது அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் காணப்பட்ட நிலையில், குறித்த இடங்களுக்கு மேற்குறித்த நான்கு வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே சொஹைப் மலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஸ்டாலியன்ஸ் அணியில் மொத்தமாக 20 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான கெயல் அபோட் மற்றும் டுவான்னே ஒலிவீர் ஆகியோர் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கௌண்டி அணிகளான ஹெம்ஷையர் மற்றும் யோக்ஷையர் ஆகிய அணிகளில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் லங்கா ப்ரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் தற்போது விளையாடவுள்ளனர். 

இவர்கள், இலங்கை அணியின் சுரங்க லக்மால், பினுர பெர்னாண்டோ, பாகிஸ்தானின் உஷ்மான் ஷின்வாரி ஆகியோருடன் வேகப்பந்துவீச்சை அலங்கரிக்க உள்ளனர்.

இதேவேளை, இங்கிலந்து அணியின் முன்னாள் வீரரான ரவி பொப்பாரா மற்றும் இளம் இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் டொம் மூர்ஸ் ஆகியோர், திசர பெரரோ தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை மேலும் பலப்படுத்தவுள்ளனர்.

Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் 26ம் திகதி முதல் டிசம்பர் 16ம் திகதிவரை ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் குழாம்

உள்நாட்டு வீரர்கள்

திசர பெரேரா, வனிந்து ஹசரங்க, அவிஷ்க பெர்னாண்டோ, தனன்ஜய டி சில்வா, சுரங்க லக்மால், பினுர பெர்னாண்டோ, மினோத் பானுக, சதுரங்க டி சில்வா, மஹேஸ் தீக்ஷன, சரித் அசலங்க

வெளிநாட்டு வீரர்கள்

சொஹைப் மலிக், உஸ்மான் ஷின்வாரி, கெயல் அபோட், டுவான்னே ஒலிவீர், டொம் மூர்ஸ், ரவி பொப்பாரா

இளம் வீரர்கள்

நவனிந்து பெர்னாண்டோ, கனகரத்னம் கபில்ராஜ், தெய்வேந்திரம் டினோஷன், விஜயகாந் வியாஸ்காந்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<