முன்னணி பந்துவீச்சாளரை இழக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி

Indian Premier League 2022

238

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவந்த டைமால் மில்ஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டைமால் மில்ஷின் கணுக்கால் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதால், அவர் இந்த ஆண்டுக்கான மிகுதி உள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த டேவிட் வோர்னர்

இதன்காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி புதுமுக துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணியில் இணைத்துள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டிரிஷ்டன் ஸ்டப்ஸ் என்ற இளம் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரை மும்பை அணி வாங்கியுள்ளது. இவரை அவருக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபாவுக்கு மும்பை அணி வாங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டைமால் மில்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இம்முறை 5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தியுள்ளார். இறுதியாக விளையாடிய லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் 3 ஓவர்களில் 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். எவ்வாறாயினும் இவருக்கான உபாதை சிறியதாக உள்ளது எனவும், அவர் எதிர்வரும் 26ம் திகதி சசெக்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20 பிளாஸ்ட் போட்டியில் விளையாட தயாராகிவிடுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிரிஷ்டன் ஸ்டப்ஸ் தென்னாபிரிக்கா தேசிய அணிக்காக விளையாடாத போதும், உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றார். இதில் இறுதியாக நடைபெற்றுமுடிந்த உள்ளூர் T20 லீக்கில் 293 ஓட்டங்களை 48.83 என்ற சராசரியிலும், 183.12 என்ற ஓட்டவேகத்திலும் குவித்துள்ளார். அத்துடன் மொத்தமாக 17 T20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 506 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 11 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<