ICC இன் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு

265
Bhuvneshwar Kumar

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மார்ச் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் வென்றுள்ளார்.  இதில் மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தென்னாபிரிக்காவின் லிஸெலெ லீ தேர்வாகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதத்திற்குமான சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது

>> மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் யார்?

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக ICC தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்தியாவின் ரிஷாப் பாண்ட் தேர்வானார். அதனைத்தொடர்ந்து பெப்ரவரி மாதத்துக்கான விருது இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3ஆவது மாதத்துக்கான சிறந்த வீரராக இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 6 விக்கெடடுக்களையும், 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியதால் இவ்விருதுக்கு அவர் தேர்வானார்

இதன்மூலம் தொடர்ந்து 3ஆவது முறையாக இந்திய வீரருக்கு ICC இன் மாதத்தின் சிறந்த வீரர் விருது கிடைத்துள்ளது.

>> IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்காக புவனேஷ்வர் குமாருடன், ஆப்கானிஸ்தானின் ஷீத் கான், ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டது

இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக தென்னாபிரிக்க வீராங்கனை லிஸெலெ லீ, மார்ச் மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

அந்தத் தொடரில் ஒரு சதம், இரண்டு அரைச் சதம் விளாசிய அவர், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்காக லீயுடன், இந்தியாவின் ராஜேஷ்வரி கெய்க்வாட், பூனம் ரௌத் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<