தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினருக்கு தொடரும் வெற்றி

240
triangular series 6th match

அணித்தலைவரின் அசத்தல் மூலம் போராடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியினர் வெற்றிப்பாதையில்

இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க சென்று விளையாடிக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின் 6ஆவது போட்டி நேற்று முடிவடைந்தது.

இலங்கை அபிவிருத்தி அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக் கப்பல்கலைக்கழக விளையாட்டு அணி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கோண சுற்றுப் போட்டித் தொடரின்  6ஆவது போட்டியாக  பிரிட்டோரியா மைதானத்தில் இலங்கை அபிவிருத்தி அணியினருக்கும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினருக்குமிடையில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கைஅபிவிருத்தி அணியினரைப் பணித்தனர்.

இலங்கை அபிவிருத்தி அணியினர் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினரின் பலத்த பந்துவீச்சை எதிர் கொண்டு 7 விக்கட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். தொடரில் அசத்திவரும்  ஹசன் துமிந்த நிதானமான ஆட்டத்தினால் 135 பந்துகளை எதிர் கொண்டு 104 ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் புத்திக்கே 43 ஓட்டங்களை 53 பந்துகளில் குவித்தார். தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினரின் சார்பாகப் பந்துவீச்சில் பிஜுரன் போர்டுன் 34 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளையும், வின்சென்ட் மூர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளயும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் தலைவரின் அபார ஆட்டத்தின் மூலம்  47.3 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 244 ஓட்டங்களைக் குவித்து வெற்றியடைந்தனர். மார்க்கிஸ் அக்கர்மன் ஆட்டமிழக்காமல்  82 ஓட்டங்களை 79 பந்துகளிலும், டு ப்லூ 49 ஓட்டங்களை 69 பந்துகளில் குவித்தார். இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் கேசன் விஜேரத்ன 51 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளும், சதுரங்க 57 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளும்பெற்றனர்.

போட்டியின் சாரம்சம்

இலங்கை அபிவிருத்தி அணி – 240/7 (50)

லஹிரு மிலந்த 104, ரமேஷ் புத்திக்கே 43, சதீர சமரவிக்கரம 27 பிஜுரன் போர்டுன் 3/34, வின்சென்ட் மூர் 2/39, டெசிபோ நீட்டுலே 1/32.

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி – 244/7 (47.3)

மார்க்கிஸ் அக்கர்ம 82*, டு ப்லூ 49, சிபெனிலோ மகாஹின்யா 37

ஸஞ்ஜய சதுரங்க 2/57, கேஷன் விஜயரத்ன 2/51, பிரியாமல் பெரேரா 1/18

முடிவு – தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியினர் 3 விக்கட்டுகளால் அபார வெற்றியடைந்தனர் .