இந்தியாவுக்கு அபராதம் செலுத்தவுள்ள பாக். கிரிக்கெட் சபை

149

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் தொடரப்பட்டிருந்த பதில் வழக்கினுடைய தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது. அதன்படி 35 கோடி ரூபாயை அண்மித்த தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அபராதமாக செலுத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

15ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில்

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள….

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல், பயங்கரவாத மற்றும் எல்லை  ரீதியிலான பிளவானது இரு நாடுகளுக்குமிடையிலான விளையாட்டிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.  

இந்தியாபாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி என்றாலே விறுவிறுப்புத்தான் அமைந்திருக்கும். மேலே கூறப்பட்டுள்ள காரணங்கள் இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன. எனினும், இவை காரணமாக இரு நாடுகளும் எதிர் எதிரே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்து வருகின்றது.

பாகிஸ்தான், பழைய பகைகளை மறந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் கூட, பயங்கரவாதிகளுக்கு துணைபோவதாக கூறி இந்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாடுவதில்லை என்பதில் கடும் பிடிவாதமாக உள்ளது.

இதன் காரணமாக .சி.சி உலகக் கிண்ண போட்டி, .சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டி மற்றும் ஆசிய கிண்ண போட்டித் தொடர் ஆகியவைகளில் மாத்திரம் இரு நாடுகளும் இன்றுவரையில் நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன.  

தென்னாபிரிக்க டி20 லீக் தொடரின் சம்பியனாகிய ஜோசி ஸ்டார்ஸ்

தென்னாபிரிக்காவில் முதல் முறை ….

இந்நிலையில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நாடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இரு தரப்பு தொடர்களில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மறுப்பு தெரிவித்திருந்தது.

மேலும், 2015 தொடக்கம் 2023 வரையிலான காலப்பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த 6 தொடர்களில் விளையாடவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையானது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபையிடம் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது. குறித்த வழக்கு விசாரணையை .சி.சி நிராகரிக்க, இறுதியில் தீர்ப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு சாதகமாக மாறியது.

சகலதுறை வீரர் ஹார்த்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணியில்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ….

அந்த அடிப்படையில் .சி.சி யின் வருமான பங்கீட்டு முறையில் தங்களுக்கு ஆதரவு தருவதாக கூறிவிட்டு உறுதிமொழியை கடைபிடிக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் சபை பதில் வழக்கை தொடர்ந்திருந்தது.

இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் தொடரப்பட்ட வழக்கிற்கான முழு செலவுத் தொகையையும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த .சி.சி இறுதியில் இந்திய கிரிக்கெட் சபை செலவழித்த மொத்த தொகையில் 60 சதவீதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபைக்கு செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. மேலும், தீர்ப்பு வழங்கிய மூவரடங்கிய குழுவின் நிர்வாக செலவுத் தொகையில் 40 சதவீதத்தை இந்திய கிரிக்கெட் சபை செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை செலுத்த வேண்டிய சரியான தொகை அறிவிக்கப்படாவிட்டாலும் கணக்கீட்டின் அடிப்படையில் 35 கோடி செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<