AFC (23 வயதுக்கு உட்பட்ட) கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்டோர் அணி சார்பாக விளையாடுவதற்கான வீரர்கள் தெரிவு செய்யும் நிகழ்ச்சி திட்டத்தினை மாகாண ரீதியாக நடாத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.

எதிர் வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறவிருக்கும் இந்த AFC கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரில் குழு A இல் ஈரான், ஓமான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அணிகளுடன் சேர்த்து இலங்கை போட்டியிடுகின்றது.

தேசிய அணிக்கான இந்த  வீரர்கள் தெரிவு நிகழ்ச்சி திட்டத்தில் பங்கு பெறவிருக்கும் வீரர்கள் 1995 ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலோ அல்லது அதற்கு பின்னரான திகதி ஒன்றிலோ பிறந்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை இலங்கை கால்பந்து சம்மேளனம் விதித்துள்ளது.

வீரர்கள் தெரிவு நடைபெறும் இடங்கள், காலம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு

வட மாகாணம்

  • ஏப்ரல் 1ஆம் மற்றும் 2ஆம் திகதி : கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு  – புனித அந்தோனியர் விளையாட்டு மைதானம், இர்ரயகுளம் (இறால்குளம்) காலை 8 மணி
  • ஏப்ரல் 3ஆம் மற்றும் 4ஆம் திகதி: வடமராட்சி மற்றும் பருத்தித்துறை  – நெல்லியடி மத்திய கல்லூரி, நெல்லியடிகாலை 8 மணி
  • ஏப்ரல் 5ஆம் மற்றும் 6ஆம் திகதி: வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் – FFSL பயிற்சி மையம்,அரியாலை  – காலை 8 மணி
  • ஏப்ரல் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி: மன்னார் மற்றும் வவுனியா  – மன்னார் நகர  சபை மைதானம், காலை 8 மணி

கிழக்கு மாகாணம்

  • ஏப்ரல் 20ஆம் மற்றும் 21ஆம் திகதி: திருகோணமலை, மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி  – ஏகாம்பரம் மைதானம், திருகோணமலை  – காலை 8 மணி
  • ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதி: மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் காத்தான்குடிவெபர் மைதானம், மட்டக்களப்பு  – காலை 8 மணி

மத்திய மாகாணம்

  • ஏப்ரல் 29ஆம் மற்றும் 30ஆம் திகதி:  கம்பளை, நாவலப்பிட்டிய, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, அவிஸ்ஸாவலை, மாவனல்லை, கேகாலைஇடம் பின்னர் அறிவிக்கப்படும்  – காலை 8 மணி

வடமேல் மாகாணம்

  • மே 6ஆம் மற்றும் 7ஆம் திகதி: சிலாபம், புத்தளம், வென்னப்புவ, அனுராதபுரம், பொலன்னறுவைமாளிகாப்பட்டிய மைதானம், குருநாகல்காலை 8 மணி

தென் மாகாணம்

  • மே 13ஆம் மற்றும் 14ஆம் திகதி: காலி, கதிர்காமம், அம்பலாங்கொடை, தங்காலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, FFSL கால்பந்து தொகுதி, மாத்தறை  – காலை 8 மணி

மேல் மாகாணம்

  • மே 20ஆம் மற்றும் 21ஆம் திகதி: கம்பஹா, களுத்துறைசிட்டி கால்பந்து தொகுதி  – காலை 8 மணி