இந்திய தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

India tour of New Zealand 2022

190

இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்திலிருந்து முக்கிய மாற்றமாக மார்டின் கப்டில் தற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

>> T20 உலகக்கிண்ண பரிசுத்தொகை! ; இலங்கை அணிக்கு எவ்வளவு தெரியுமா?

மார்டின் கப்டில்  இறுதியாக நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாத்தில் இடம்பெற்றிருந்த போதும், அவர் எந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. பின் எலன் அணியில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வருவதால், மார்டின் கப்டிலின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதேநேரம் டிரெண்ட் போல்ட் ஏற்கனவே நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளதன் காரணமாக அவரும் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டிரெண்ட் போல்ட் நீக்கப்பட்டுள்ள நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பிளயர் டிக்னர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

>> உபாதைகள் துரதிஷ்டமா? ; மாற்றுத்திட்டத்தை நோக்கும் இலங்கை?

நியூசிலாந்து குழாம்களை பொருத்தவரை T20 உலகக்கிண்ணத்திலிருந்து பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பிளயர் டிக்னருடன் எடம் மில்னே மற்றும் டொம் லேத்தம் ஆகியோர் மாத்திரமே புதிதாக குழாத்திற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவராக கேன் வில்லியம்சன் தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 25ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<