ஒலிம்பிக் கால்பந்து முதல் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் இலகு வெற்றி

Tokyo Olympic - 2020

150
 

ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா, வெள்ளிக்கிழமை எளிமையான ஆரம்ப விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், சொவ்ட்போல் எனப்படும் பெண்களுக்கான மென்பந்து போட்டி மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி ஆகிய இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளும் கடந்த புதன்கிழமை (21) முதல் ஆரம்பமாகின.

ஆண்களுக்கான கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

பி பிரிவுக்காக நடைபெற்ற லீக் போட்டியில் கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிய பிரேசில்ஜேர்மனி அணிகள் மோதின

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் சம்பியனான பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது. பிரேசில் அணியில் ரிச்சர்லிசன் ஹெட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

இதனிடையே, குறித்த பிரிவுக்காக நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ருமெனியா அணி 1க்கு 0 என ஹொட்டூராஸ் அணியை வீழ்த்தியது.

இதன்மூலம் 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் முதல் வெற்றியை ருமேனியா அணி பதிவுசெய்தது.

இந்த நிலையில், சி பிரிவுக்காக நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது

அதே பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் எகிப்து ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டி கோல் இன்றி நிறைவுக்கு வந்தது

இதனிடையே பிரிவில் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியதுஅதேபோல, உலக சம்பியன் பிரான்ஸ் அணி 4க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது

இதுஇவ்வாறிருக்க, டி பிரவுக்காக நடைபெற்ற போட்டிகளில் ஐவரி கோஸ்ட் அணியை 2க்கு 1 என சவூதி அரேபியாவும்தென் கொரியாவை 1க்கு 0 என நியூசிலாந்து அணியும் வீழ்த்தியது.

இம்முறை ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து காலிறுதிப் போட்டிகள் ஜூலை 31ஆம் திகதியும், அரை இறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 3ஆம் திகதியும்வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி ஆகஸ்ட் 6ஆம் திகதியும்இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7ஆம் திகதியும் நடைபெறும்.

மென்பந்தில் அமெரிக்கா, ஜப்பானுக்கு 2ஆவது வெற்றி   

பெண்களுக்கான மென்பந்து போட்டி நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய நிலையில், தற்போது வரை ஆறு போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், முதல் சுற்றுக்கான 3 போட்டிகள் நடைபெற்றன. இதன் முதல் போட்டியில் அமெரிக்காகனடா அணிகள் மோதின

7 இன்னிங்ஸ்கள் வரை நீடித்த இப்போட்டியில் கனடாவை 1 – 0 என்ற ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்கா வெற்றிகொண்டது.

பெண்களுக்கான மென்பந்து போட்டியில் மெக்சிகோவை 3 – 2 (5 இன்னிங்ஸ்கள்) ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒலிம்பிக் வரவேற்பு நாடான ஜப்பான் வெற்றிகொண்டது. இது ஜப்பானின் இரண்டாவது வெற்றியாகும்

கடைசியாக பிற்பகல் நடைபெற்ற 3ஆவது போட்டியில் இத்தாலியை எதிர்த்தாடிய அவுஸ்திரேலியா 7 இன்னிங்ஸ்களில் 1 – 0 என்ற ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனிடையே, நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…