விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய இரண்டிலும் வெற்றிப்பெறும் வழிகள்

2252
 

வயதில் மூத்தவர்களாகிய எமக்கு ஏற்படக் கூடிய பதற்றம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றில் சிலவற்றை எம்மால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது. அனால் சிறுவர்களையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களையும் பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?

தவணை விடுமுறைகளின் பின்னர் பாடசாலை ஆரம்பமாகும் பொழுது மற்றும் விளையாட்டில் இன்னொரு தவணை ஆரம்பமாகும் பொழுதும், விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வாறு கல்வியில் அதிக புள்ளிகளை பெறுவதோடு எவ்வாறு விளையாட்டிலும் உச்ச திறமையை வெளிக்காட்டுவது?

விளையாட்டு உங்களை பாடசாலையிலும் திறமைசாலியாக மாற்றும்

விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களுக்கு காலம் செல்லச் செல்ல, விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தினால் கல்வியின் மீதுள்ள ஆர்வம் குறையும் என்ற ஒரு பொதுவான கருத்து காணப்படுகிறது. அனால் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களை பொறுத்த வரையில் இது உண்மையல்ல.  விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள், விளையாட்டில் ஈடுபடாத மாணவர்களை விட கல்வியில் சிறந்து காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சமூகவியலாளர் ஜே.கோக்லே தனதுசமூகத்தில் விளையாட்டுஎன்ற புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார்தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது பின்வரும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விளையாட்டில் ஈடுபடாத மாணவர்களுடன் ஒப்பிடும் பொழுது, விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பொதுவாக கல்வியில் அதிக புள்ளிகளை பெறுகின்றனர், பாடசாலையின் மீது அதிக ஆர்வமுடையவர்களாகவும் காணப்படுகின்றனர். மேலும் உயர் படிப்பிற்கு பின்னரும் கல்வியை தொடரக் கூடியவர்களாக உள்ளனர். அதேபோன்று, அதிகமாக சித்தியடைபவர்களாக உள்ளனர்.”  

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு தகுந்த இடைவேளை இல்லை மற்றும் பாடசாலை வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் போதல் போன்ற விடயங்கள் விவாதத்திற்குரியது. இதற்குறிய சரியான தீர்வு விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் சமமாகப் பேணி, விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சாதிக்க வேண்டும் என்பதேயாகும்.

விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சமநிலையை பேணுதல்

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் எவ்வாறு விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சமநிலையை பேணுவது? நேரத்தை சேமிப்பதற்கான வழிமுறைகளை அறிவதன் மூலமும் அவற்றை சரி வர செயற்படுத்துவதன் மூலமும் மாணவன் ஒருவன் விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சாதிக்கலாம்.

ஒழுங்கமைத்தல்நாட்குறிப்பொன்றில் பாடசாலை வேலைகள், பரீட்சை தினங்கள், விளையாட்டு பயிற்சி நேரங்கள், போட்டி நேரங்கள் என்ற அனைத்தையும் குறித்து வைத்து கொள்ளுதல். ஒவ்வொரு கிழமையும் அதனை மீள்   பரிசீலனை செய்து தேவையான திருத்தங்களை செய்தல்.

நேர முகாமைநேரம் வரையறுக்கப்பட்டது என்பதனால் நீங்கள் உங்களது நேரத்தை திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். பாடசாலை நேரம், விளையாட்டு பயிற்சிக்கான நேரம், வீடு செல்வதற்கு எடுக்கும் நேரம் அனைத்தையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு வீட்டு வேலைகளுக்கான மற்றும் படிப்பிற்காக தேவைப்படும் நேரத்தை அறிந்துக்கொள்ள முடியும்.

உங்கள் கிழமையை நீங்கள் திட்டமிடுதல் உங்கள் நாட்குறிப்பை கவனித்து எப்போது உங்களுக்கு பரீட்சை உள்ளது, எப்போது போட்டிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். பின்னர் எவ்வாறு படிப்பது, எவ்வாறு தயாராவது என்று தீர்மானம் எடுங்கள்.

வார இறுதி நாட்களை வினைத்திறனாக பயன்படுத்தல்வார இறுதி நாட்களை வருகின்ற கிழமைக்கு தயார்படுத்தும் நேரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பாடங்களை முன்னரே வாசித்து சிறு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

பயண நேரத்தை பயனுள்ளதாக்குங்கள்நீங்கள் வீட்டிலிருந்து பாடசாலை செல்லும் நேரத்தையோ அல்லது பயிற்சிகளுக்கு செல்லும் வேளையிலோ புத்தகம் வாசியுங்கள், படித்ததை திருப்பிப் பாருங்கள். முக்கியமாக ஒலி மூல புத்தகங்களை துணையாக்கிக் கொள்ளுங்கள்.

தள்ளி போடாதீர்கள் வீட்டு வேலைகளை அல்லது பணிகளை இறுதி நேரம் வரை வைத்துக்கொல்லாதிர்கள். தரப்பட்டவுடன் செய்து முடியுங்கள். திறனற்ற திட்டம் மற்றும் தள்ளி போடுதல் ஆகிய இரண்டும் பல விடயங்களை முழுமையாக செய்ய விடாது தடுக்கும்.

படிக்கும் அறைகள் மற்றும் இடைவேளை நேரங்களில் முழு பயனை பெறுங்கள் வீட்டு வேலைகளை செய்யுங்கள், உதவி கேட்டு படியுங்கள். சில பாடசாலைகளில் படிக்கும் அறைகள், பாட்டு கேட்க மற்றும் ஓய்வு எடுக்கவே பயன்படுகிறது. இது பிழையாகும். இலவச பாடவேளைகளின் பொழுது படியுங்கள்.

பாடசாலை வளங்களை பயன்படுத்துங்கள் பல பாடசாலைகள், விளையாட்டு வீரர்களுக்காக விசேட வகுப்புகளை ஒழுங்கு செய்யும். இவ்வாறான வளங்களை முடியுமான அளவு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நேரத்திற்கான கேள்வி என்றுமே குறையாது. நேர முகாமை தொடர்பான துணுக்குகள் மற்றும் வழிமுறைகளை சரி வர செய்வதன் மூலம், பெற்றோர், பயிற்றுவிப்பாளர் மற்றும் வயதில் உயர்ந்தவர்களாகிய நாம், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையையும் வெற்றிப்பெறச் செய்யலாம்.