தமிழ் யூனியன் கழகத்திற்காக சதம் கடந்த தரங்க பரணவிதான

524
Associated Press

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரிமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (16) ஐந்து போட்டிகள் நிறைவுக்கு வந்ததோடு ஒரு போட்டி ஆரம்பமாகியிருந்தது.

இன்றைய போட்டிகளில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தரங்க பரணவிதான சதம் பெற்று அசத்த, மிலிந்த சிறிவர்தன, மலிந்த புஷ்பகுமார ஆகியோரும் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் யூனியன், SSC, NCC அணிகள் ஸ்திரமான நிலையில்

சிலாபம் மேரியன்ஸ் கழகம் எதிர் NCC

NCC அணியின் சொந்த மைதானத்தில் இப்போட்டி நிறைவுக்கு வந்தது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் NCC அணி 321 ஓட்டங்கள் பெற்றிருக்க, சிலாபம் மேரியன்ஸ் அணியினர் 193 ஓட்டங்களை மட்டுமே தமது முதல் இன்னிங்ஸில் பெற்றனர். இதனை அடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாடிய NCC வீரர்கள் 241 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தினர்.

இதனால், சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு போட்டியின் வெற்றி இலக்காக 370 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி இலக்குக்காக இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி 315 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

சிலாபம் மேரியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக RV கோமேஸ் (68), நிமேஷ் விமுக்தி (79*) மற்றும் BOP பெர்னாந்து (67) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 321 (86.4) – பத்தும் நிஸ்ஸங்க 74, லஹிரு உதார 66, சாகர் பரேஷ் 4/74

சிலாபம் மேரியன்ஸ் (முதல் இன்னிங்ஸ்) – 193 (55) – ஹர்ஷ கூரே 48, திலேஷ் குணரட்ன 5/52

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 241/5d (42) – லஹிரு உதார 85, உபுல் தரங்க 66, சத்துரங்க டி சில்வா 52*, HRC டில்ஷான் 2/48

சிலாபம் மேரியன்ஸ் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 315/9 (68) – RV கோமேஸ் 68, BOP பெர்னாந்து 67, நிமேஷ் விமுக்தி 79*, சத்துரங்க டி சில்வா 5/95

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன்

தமிழ் யூனியன் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இப்போட்டியும் சமநிலைக்கு வந்தது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொள்ளும் நியூசிலாந்து

பி. சரவணமுத்து மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தமிழ் யூனியன் அணி இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான தரங்க பரணவிதான மற்றும் லஹிரு மிலந்த ஆகியோரின் அபார சதங்களோடு 481 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இதன் பின்னர் முன்னதாக தமது முதல் இன்னிங்ஸில் 386 ஓட்டங்களை குவித்திருந்த இராணுவப்படை விளையாட்டுக் கழக அணி 95 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பம் செய்து இரண்டாம் இன்னிங்ஸிற்காக 66 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்கள் இழந்திருந்த நிலையில் போது மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை (முதல் இன்னிங்ஸ்) – 386 (128) – சஞ்சிக்க ரித்ம 64, யசோத மெண்டிஸ் 55, லஹிரு மிலந்த 4/33

தமிழ் யூனியன் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 481/4d (115.5) – தரங்க பரணவிதான 124*, லஹிரு மிலந்த 103, சித்தார கிம்ஹான் 93, லக்ஷான் மதுசங்க 2/94

இராணுவப்படை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 66/3 (22)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

சோனகர் கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகியிருந்த இப்போட்டியும் சமநிலை முடிவையே பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சோனகர் அணி 337 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற, றாகம கிரிக்கெட் கழகம் இஷான் ஜயரத்ன (124), சுபேஷல ஜயத்திலக்க (114) மற்றும் அக்ஷூ பெர்னாந்து (102*) ஆகிய மூன்று வீரர்களின் அதிரடி சதங்களோடு 497 ஓட்டங்களை பெற்று தங்களது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

>>Photos : Ragama CC vs Moors SC | Major League Tier A Tournament 2018/19<<

பின்னர், 160 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த சோனகர் அணி ISS சமரசூரிய (82) பெற்ற அரைச் சதத்துடன் 269 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 337 (84.2) – சரித்த குமாரசிங்க 103, இரோஷ் சமரசூரிய 60, அமில அபொன்சோ 3/117

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 497/9d (125.1) – இஷான் ஜயரட்ன 123, சுபேஷல ஜயத்திலக்க 114, அக்ஷூ பெர்னாந்து 102*, மலித் டி சில்வா 4/171

சோனகர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 269/5 (52) – ISS சமரசூரிய 87, அமில அபொன்சோ 2/59

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பில் முடிந்த இப்போட்டியும் சமநிலை அடைந்தது. இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் முதல் இன்னிங்ஸை (383) அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழக அணி அஷேன் சில்வாவின் (109) சதத்தின் உதவியோடு 316 ஓட்டங்களை பெற்றது. இதேநேரம் நீர்கொழும்பு அணியை பந்துவீச்சில் மிரட்டிய மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

>>Photos: CCC vs Negombo CC | Major League Tier A Tournament 2018/19<<

பின்னர், போட்டியின் இன்றைய மூன்றாம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸை 67 ஓட்டங்கள் முன்னிலையோடு ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 66 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது ஆட்ட நேரம் முடிய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 383 (100.3) – மினோத் பானுக்க 88, லஹிரு மதுஷங்க 72, அஷான் பிரியஞ்சன் 53, ரொஷேன பெர்னாந்து 4/66

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (153) – அஷென் சில்வா 109, திலஸ்ரீ லொக்குபண்டார 54, மலிந்த புஷ்பகுமார 5/90

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 66/1 (10)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

SSC அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கி சமநிலை முடிவை பெற்ற இந்தப் போட்டியில், கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்களை குவித்தது. எனினும், SSC அணியினர் 285 ஓட்டங்களை மட்டுமே தங்களது முதல் இன்னிங்சுக்காக பெற்றனர்.

தொடரந்து போட்டியின் மூன்றாம் நாளில், 80 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் PVR டி சில்வா (104*) ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்ட சதத்துடன் 300 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 365 (108.1) – சங்கீத் கூரே 119, ஹஷான் துமின்து 119, சச்சித்ர சேனநாயக்க 7/88

SSC (முதல் இன்னிங்ஸ்) – 285 (81.2) – சாமர கப்புகெதர 69, கெளஷால் சில்வா 45, மகேஷ் தீக்ஷன 5/76

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 300/8 (68) – PVR டி சில்வா 104*, சங்கீத் கூரே 58, சச்சித்ர சேனநாயக்க 3/54

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது


செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

மக்கோன சர்ரே மைதானத்தில் இன்று (16) செரசன்ஸ் மற்றும் பதுரெலிய விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான  இப்போட்டி ஆரம்பமாகியது.

இலங்கை மகளிர் கால்பந்து அணியில் மலையக வீராங்கனை யுவராணி

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது மிலிந்த சிறிவர்தன பெற்றுக் கொண்ட சதத்துடன் முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை குவித்து வலுவாக காணப்படுகின்றது.

ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கும் மிலிந்த சிறிவர்தன சதம் தாண்டி 144 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 286/5 (91) – மிலிந்த சிறிவர்த்தன 144*, AD சோலமன்ஸ் 36

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க