ஐரோப்பியக் கிண்ண இறுதி 16 அணிகள்

230
Euro 2016 Round of 16

ஐரோப்பிய கால்பந்து கடந்த 10ஆம் திகதி தொடங்கியது. இதில் 24 அணிகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்றன.

‘லீக்’முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்அவுட்” சுற்றுக்குத் தகுதிபெறும். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 3–வது இடத்தைப் பிடிக்கும் அணிகளில் ‘டாப் 4’ நாடுகளும் “நாக்அவுட்” சுற்றுக்குத் தகுதிபெறும். நேற்றுடன் “லீக்” ஆட்டம் முடிந்தன. அதன்படி

நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் விவரம்

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து (‘ஏ’பிரிவு), வேல்ஸ், இங்கிலாந்து, சுலோவாக்கியா (‘பி’பிரிவு), ஜெர்மனி, போலந்து, வடக்கு அயர்லாந்து (‘சி’பிரிவு), குரோஷியா, ஸ்பெயின் (‘டி’பிரிவு), இத்தாலி, பெல்ஜியம், அயர்லாந்து குடியரசு (‘இ’பிரிவு), ஹங்கேரி, ஐஸ்லாந்து, போர்த்துக்கல் (‘எப்’ பிரிவு).

வெளியேற்றப்பட்ட அணிகள் விவரம்

அல்பேனியா, ருமேனியா (ஏ), ரஷியா (பி), உக்ரைன் (சி), துருக்கி, செக்குடியரசு (டி), சுவீடன் (இ), ஆஸ்திரியா (எப்).