SA20 தொடர் ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்!

ICC T20 World Cup 2022

844

தென்னாபிரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள SA20 லீக் தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

SA20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று திங்கட்கிழமை (19) ஆறு அணிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.

>> பாபரும், ரிஸ்வானும் தங்களது கவனத்தினை அதிகரிக்க வேண்டும் – மொஹமட் ஹபீஸ 

வீரர்கள் ஏலத்தில் ஒட்டுமொத்தமாக 533 வீரர்கள் பங்கேற்றிருந்ததுடன், இதில் 102 வீரர்களை அணிகள் வாங்கியிருந்தன.

குறிப்பிட்ட இந்த ஏலத்தில் இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தபோதும், ஏலத்தின்போது இளம் வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோர் மாத்திரமே அணிகளால் வாங்கப்பட்டிருந்தனர்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டில்ஷான் மதுசங்க டர்பன் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக 275,000 தென்னாபிரிக்க ரெண்ட்ஸிற்கு (இலங்கை ரூபாயில் சுமார் 55 இலட்சம்) வாங்கப்பட்டார்.

அதேநேரம் குசல் மெண்டிஸ் அவருக்கான நிர்ணயத்தொகையான 425,000 தென்னாபிரிக்க ரெண்ட்ஸிற்கு பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். இந்த தொகையானது இலங்கை ரூபாயில் கிட்டத்தட்ட 86 லட்சம் ஆகும்.

மற்றுமொரு வீரரான மஹீஷ் தீக்ஷன ஏலத்தில் வாங்கப்படாதபோதும், ஜோபேர்க் சுபர் கிங்ஸ் அணி ஏற்கனவே அவரை அணியில் தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள SA20 தொடர் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன், எம்.ஐ கேப் டவ்ண், டர்பன் சுபர் ஜயண்ட்ஸ், ஜோபர்க் சுபர் கிங்ஸ், பார்ல் றோயல், பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<