தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய அங்கத்தவர்கள் நியமனம்

National Sports Council

200

தேசிய விளையாட்டு பேரவையின் புதிய தலைவராக கலாநிதி மையா குணசேகர விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தேசிய விளையாட்டுப் பேரவை மற்றும் தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான நியமனங்களை இன்றைய தினம் (04) வழங்கியுள்ளார்.

>> கோஹ்லி, ரோஹித்திற்கு ஓய்வு; புதிய தலைவர்களுடன் களமிறங்கும் இந்தியா

அதன்படி விளையாட்டு பேரவையின் தலைவராக மையா குணசேகர பெயரிடப்பட்டுள்ளதுடன், செயலாளராக ஐ.யு. விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விளையாட்டு பேரவையில் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 15 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், தேசிய தெரிவுக்குழுவில் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 05 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தெரிவுக்குழுவின் தலைவராக முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், செயலாளராக அர்ஜூன் ரிஷ்யா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுடன் தேசிய தெரிவுக்குழுவின் உறுப்பினர்களாக மையா குணசேகர, சுரேஸ் சுப்ரமணியம் மற்றும் நலிந்த சம்பத் இலங்ககோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய விளையாட்டு பேரவை

 1. மையா குணசேகர (தலைவர்)
 2. ஐ.யு. விக்ரமசூரிய (செயலாளர்)
 3. ஸ்ரீயானி குலவன்ச
 4. ராஜித அம்பெமொஹொட்டி
 5. அர்ஜுன டி சில்வா
 6. பந்துக கீர்தினந்த
 7. அனா ஜி.ஜி. புஞ்சிஹேவா
 8. மலிக் காதர்
 9. ஹபீஷ் மர்ஷோ
 10. எஸ்.வி.டி. நாணயகார
 11. சித்தார்த் வெத்தமுனி
 12. ஜெகத் ஜயசூரிய
 13. அனுராத இலபெரும
 14. ஷெமால் பெர்னாண்டோ
 15. கமல் தேசபிரிய

தேசிய தெரிவுக்குழு

 1. ஷவேந்திர சில்வா (தலைவர்)
 2. அர்ஜூன் ரிஷ்ய பெர்னாண்டோ (செயலாளர்)
 3. மையா குணசேகர
 4. சுரேஸ் சுப்ரமணியம்
 5. நலிந்த சம்பத் இலங்ககோன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<