சலாஹ்வின் பெனால்டி சர்ச்சையுடன் வெற்றி பெற்ற லிவர்பூல்

253
 

கிறிஸ்டல் பெளஸ் கால்பந்து அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் லிவர்பூல் அணி இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. எனினும் லிவர்பூல் நட்சத்திரம் முஹமட் சலாஹ் கிழே விழுந்து அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்த பெனால்டி வாய்ப்பு சர்ச்சையை கிளப்பியது.

யுனைடெட் அணி அதிர்ச்சித் தோல்வி: சிட்டிக்கு இலகு வெற்றி

இங்லாந்து பிரீமியர் லீக் தொடரில் ஞாயிற்றுக்கிழமை..

செல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (21) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லிவர்பூல் அணி இந்த பருவத்திற்கான பிரீமியர் லீக் தொடரின் இதுவரையான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்ற ஐந்து அணிகளில் ஒன்றாக முன்னேறியது.  

இந்தப் போட்டியில் பலம்மிக்க லிவர்பூல் அணி ஆதிக்கம் செலுத்தியபோதும் முதல் பாதியின் கடைசி நேரத்தில் முஹமட் சலாஹ் பெற்றுக்கொடுத்த பெனால்டி வாய்ப்பே அந்த அணியை முன்னிலை பெறச் செய்தது.

44 ஆவது நிமிடத்தில் வைத்து எகிப்தின் சலாஹ் எதிரணி பெனால்டி எல்லையில் வைத்து கிறிஸ்டல் பெளஸ் வீரர் மமது சாகுவால் கீழே வீழ்த்தப்பட்டார். இதனை அடுத்து லிவர்பூல் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி உதை வாய்ப்பை கொண்டு ஜேம்ஸ் மில்னர் கோல் பெற்றார்.

எனினும், சலாஹ் வேண்டும் என்றே கீழே விழுந்ததாக கிறிஸ்டல் பெளஸ் வீரர்கள் குற்றம்சாட்டியதோடு அது சர்ச்சையை கிளப்பியது.

முதல் பாதி: லிவர்பூல் 1 – 0 கிறிஸ்டல் பெளஸ்

பரபரப்புடன் ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சலாஹ் மீண்டும் ஒருமுறை கீழே வீழ்த்தப்பட கிறிஸ்டல் பலஸ் வீரர் ஆரோன் வான்-பிஸ்ஸகாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரீமியர் லீக்: நடப்புச் சம்பியன் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு உறுதியான வெற்றி

உலகின் முன்னணி கால்பந்து தொடர்களில் ஒன்றான…

போட்டி முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது கோலை நோக்கி சலாஹ் பந்தை வேகமாக கடத்திச் சென்றபோதே எதிரணி பின்கள வீரரான வான்-பிஸ்ஸகா பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் இருந்து இந்த தவறை இழைத்தார். இதனால் கிறிஸ்டல் பெளஸ் அணி 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதை லிவர்பூல் வீரர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

போட்டியின் மேலதிக நேரத்தில் முஹமட் சலாஹ் பரிமாற்றிய பந்தை பெற்ற செனகலைச் சேர்ந்த சாடியோ மானே, கோல் காப்பாளரையும் தாண்டி பந்தை எடுத்துச் சென்று பெனால்டி எல்லையின்  வலது மூலையில் இருந்து பந்தை வலைக்குள் புகுத்தினார்.

லிவர்பூல் அணி அடுத்து, வரும் சனிக்கிழமை (25) பிரைடன் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.  

முழு நேரம்: லிவர்பூல் 2 – 0 கிறிஸ்டல் பளஸ்

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் – ஜேம்ஸ் மில்னர் (44′ பெனால்டி), சாடியோ மானே (90103)

சிவப்பு அட்டை

கிறிஸ்டல் பளஸ் – ஆரோன் வான்-பிஸ்ஸகா (75′)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<