கோஹ்லி, ரோஹித்திற்கு ஓய்வு; புதிய தலைவர்களுடன் களமிறங்கும் இந்தியா

India tour of South Africa 2023-24

280
India tour of South Africa 2023-24

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான இந்திய அணியின் தலைவர்களாக முறையே கே.எல்.ராஹூல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள், 3 T20i மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

>> 2024 T20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் அனைத்து அணிகளும் உறுதி

இதில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான குழாத்தின் தலைவராக கே.எல். ராஹூல் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ருதுராஜ் கைக்வாட், திலக் வர்மா, ரஜத் பட்டிதார், ரிங்கு சிங், வொஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சஞ்சு சம்சன், யுஸ்வேந்திர சஹால் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

T20i குழாத்தை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் இளம் வீரர்களுடன் ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வொசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை டெஸ்ட் குழாத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி உட்பட ஜஸ்ப்ரிட் பும்ரா, சுப்மான் கில், ரவிச்சந்திரன் அஸ்வின், மொஹமட் சமி, ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராஹூல் ஆகிய அனுபவ வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீடிப்பு

இந்தியா டெஸ்ட் குழாம்  

ரோஹித் சர்மா (தலைவர்), யசஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கைக்வாட், இசான் கிசன், கே.எல். ராஹூல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாகூர், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், மொஹமட் சமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, பிரசித் கிருஷ்ணா 

இந்தியா ஒருநாள் குழாம் 

ருதுராஜ் கைக்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் பட்டிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராஹூல் (தலைவர்), சஞ்சு சம்சன், அக்ஷர் படேல், வொசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்டீப் சிங், தீபக் சஹார் 

இந்தியா T20i குழாம் 

யசஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கைக்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (தலைவர்), ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிசன், ஜித்தேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வொசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்டீப் சிங், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹார் 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<