கைகலப்பில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பான விசாரணை நிறைவு

254

தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக, இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) நியமனம் செய்யப்பட்ட விசாரணை குழு அதன் முடிவினை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த திமுத் கருணாரத்ன

முன்னதாக இலங்கையின் தென்பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் தொடர்புபட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. 

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை சட்டத்தரணி ஒருவர் உள்ளடங்கலாக 03 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றினை நியமனம் செய்திருந்தது. 

தற்போது குறித்த விசாரணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக, அந்த குழுவின் முடிவும் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

அதன்படி, விசாரணைக்குழு கைகலப்பில் தொடர்புபட்டதாக குறிப்பிடப்படும் இலங்கை வீரரின் நடவடிக்கை முறையற்றது என சுட்டிக்காட்டியிருப்பதோடு, தேசிய அணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது தவறு என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. 

அதோடு, விசாரணைக்குழு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் சபை குறித்த வீரருக்கு நற்பண்பிற்கு கலக்கம் விளைவிக்கும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

IPL தொடரில் புதிய மைல்கல்லை கடந்த வில்லியர்ஸ்

மேலும் விசாரணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய கைகலப்புடன் தொடர்புபட்ட குறித்த வீரர் இலங்கை கிரிக்கெட் சபை  சிபாரிசு செய்யும் வைத்தியர் ஒருவரின் உளவியல் ஆலோசனைகளை அடுத்த ஒரு ஆண்டிற்கு பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<