வலைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு

196
Netball Federation elections before 31st May

எதிர்வரும் ஏப்ரல்  மாதம் 29ம் திகதி இடம்பெற இருந்த இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல், சம்மேளனத்தின் தணிக்கை கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின் முன்னணி கழக அணியான…

குறித்த தேர்தலுக்கான வாக்காளர் வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி நிறைவடைந்ததுடன் அவற்றிற்கான கேட்புரை 19ஆம் திகதி நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் ஆணைப்படியே வலைப்பந்தாட்ட சம்மேளன தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், தணிக்கை கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் இத்தேர்தலானது மே மாதம் 15ஆம் திகதிக்கு முதல் நடைபெறும் என அமைச்சர்  உறுதி அளித்துள்ளார்.

இதனை மேற்பார்வை செய்வதற்காக தற்போதைய உப தலைவர் செல்வி யாஸ்மின் தர்மரத்னவின் தலைமையில் செயற்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இச்செயற்குழுவில் K.D.U. தனவர்தன மற்றும் ஒலிவ் கமகே ஆகியோர் அங்கம் வகிப்பர்.

தலைவர் பதவிக்காக முன்னாள் தலைவர் திருமதி ட்ரிக்ஸீ நாணயக்கார மற்றும் திருமதி லக்ஷ்மி விக்டோரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், இப்பதவிக்கு தற்போதைய செயலாளர் திருமதி சம்பா குணவர்தன மற்றும் முன்னாள் தேசிய வலைப்பந்தாட்டத் தலைவர் திருமதி ஜெயந்தி சோமசேகரம் டிசில்வா ஆகியோரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கைகளின்படி இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் தொடர்புடைய 34 கழகங்களுக்கு வாக்குரிமை காணப்படுகின்றன.

வெகு விரைவில் தணிக்கை செய்யப்பட கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அவ்வாறு சமர்ப்பிடிக்கப்படாத பட்சத்தில் தேர்தல் நடைபெறாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.