கொரோனா வைரஸினால் இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

77

கெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை ஒத்திவைப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) அறிவித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பிறகு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இந்தத் தொடருக்காக வருகை தந்த அனைத்து இங்கிலாந்து வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மிக விரைவில் நாடு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் இங்கிலாந்தது கிரிக்கெட் சபை இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் தற்போது இலங்கையிலும் வியாபித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி சமநிலையில் நிறைவு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர்..

இந்த நேரத்தில், எங்கள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் உடல் மற்றும் மனஉறுதி மிக முக்கியமானது. எனவே, விரைவில் அவர்களை அவர்களது வீட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்போம். இவையனைத்தும் முற்றிலும் எதிர்வுகூற முடியாத காலங்கள், இதுபோன்ற முடிவுகள் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டவை என நாங்கள் கருதுகிறோம்.

இதேநேரம், எங்களுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை இரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மிக விரைவில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கடந்த 2 நாட்களாக கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<