உத்திகளிளை மாற்றியதே சிறந்த ஆட்டத்திற்கு காரணம்: திசர பெரேரா

1116

கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவுகளை சில ஓவர்களுக்குள்ளேயே மாற்றும் வல்லமை கொண்ட திசர பெரேரா, 2009ஆம் ஆண்டில் தனது அறிமுகத்திற்கு பின்னர் சில போட்டிகளிலேயே ஜொலித்திருந்தார்.

உலகக்கிண்ண வாய்ப்பு கிட்டுமா? – மனம் திறந்தார் உபுல் தரங்க

இலங்கை அணியின் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க…..

எனினும், தற்போது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கையின் மிக முக்கிய வீரராக மாறியிருக்கும் பெரேரா, கடந்த ஆண்டில் இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக மாறியதோடு, ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது  வீரராகவும் பதிவாகியிருந்தார்.

கடந்த ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் திசர பெரேரா, 25 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததோடு 415 ஓட்டங்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டில் திசர பெரேரா வேறுவகையான ஒரு துடுப்பாட்ட வீரராக உருவெடுத்திருக்கின்றார். வெறும் மூன்று போட்டிகளிலேயே ஆடியுள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் தனிநபராக தான் பதிவு செய்த அதிகூடிய ஓட்டங்களுடன் (140) மொத்தமாக 225 ஓட்டங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையே விடயங்களை மாற்ற முக்கிய காரணமாக இருந்தது. முன்னதாக இந்த நம்பிக்கை எனக்கு தரப்பட்டிருக்கவில்லை. இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளரும், துடுப்பாட்ட பயிற்சியாளரான திலான் சமரவீரவும் எனது கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த அதிகம் வேலை செய்தனர். இதனாலேயே, எல்லாம் மாறியிருக்கின்றது. “ என தென்னாபிரிக்காவில் இருந்து ThePapare.com இடம் திசர பெரேரா பேசியிருந்த போது குறிப்பிட்டிருந்தார்.

>>அதிரடி மாற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் சந்திக்கும் இலங்கை

பெளன்சர் பந்துகளை முகம் கொடுக்கும் போது நான் என்ன செய்வது என்பதில் உறுதியாக இல்லை  என என்னிடம் சொல்லப்பட்டது. எனவே, நாங்கள் (நான் தடுமாறுகின்ற) இந்த பகுதியினை முன்னேற்றுவதற்கான வேலைகளை மேற்கொண்டோம். பின்னர் இதற்கான முடிவுகளை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். (எனது உத்திகளில்) ஒரு சிறிய மாற்றமே மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனால் வெற்றி கிடைத்திருக்கின்றது. இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் மாற்ற முடிந்தது (எதிர் காலத்திலும்) என்னிடமுள்ள சிறந்த விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன். “   

பெரேராவின் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது கடந்த காலங்களில் அவரிடம் உள்ள சிறந்த விடயங்களை வெளிக்கொணர சரியான வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதே தெரிகின்றது.  அதேநேரம், திசர பெரேரா தற்போது இலங்கை அணிக்காக 7ஆம் இலக்கத்தில் துடுப்பாடுவதால் அவருக்கு சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றது.

 அணியின் தேவை எதுவோ அதுக்காகவே நான் விளையாட வேண்டி இருக்கின்றது. தற்போது நான் இருக்கின்ற துடுப்பாட்ட நிலை, ஓட்டங்களை விரைவாக குவிக்க வேண்டிய இடமாகும். எனவே, இந்த இடத்தில் இலக்குகளை வைத்து ஆடுவது இலகுவான விடயம் கிடையாது. முன்னர் நான் ஒருநாள் போட்டிகளில் நூறு ஓட்டங்களை கடக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்திருந்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. எனது துடுப்பாட்ட நிலை, அப்போது என்ன சந்தர்ப்பம் இருக்கின்றதோ அதன்படி துடுப்பாட வேண்டிய ஒரு இடமாகும். அணிக்கு ஓட்டங்கள் மிக விரைவாக தேவையாயின்  நீண்ட நேரம் துடுப்பாடுவது கடினமாகும்.  எனினும், நியூசிலாந்து நிலைமைகள் போன்று அணிக்காக நீண்ட நேரம் துடுப்பாட வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தாலும் அப்படியான சூழ்நிலைகளுக்கு என்னை இசைவாக்கி கொள்வேன்.

உண்மையை சொல்லப்போனால் எனக்கு தனிப்பட்ட ரீதியாக எந்த இலக்குகளும் கிடையாது. 2014ஆம் ஆண்டில் T20 உலக சம்பியன்ஷிப் தொடரை வென்ற அணியில் இருந்ததனை கெளரவமாக கருதுகின்றேன். இதேநேரம், கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் விளையாடியிருக்கின்றேன். எனக்கு (இலங்கை அணிக்காக) உலகக் கிண்ணம் ஒன்றை வெல்ல முடியுமாயின் அதுவே எனக்கு மிகச்சிறந்த விடயமாக அமையும்என திசர பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அணி தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரில் வரலாற்று வெற்றியைப் பெற்ற நிலையில் தற்பொழுது ஒருநாள் தொடருக்கு ஆயத்தமாகி வருகின்றது. இந்த தொடரில் மத்திய வரிசையைப் பலப்படுத்த இலங்கை அணி திசர பெரேராவின் பங்களிப்பை அதிகம் எதிர்பார்த்துள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<