நாலந்த மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரிகளுக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

217
Singer U19 Schools Cricket October 26th Roundup

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று முடிவடைந்த போட்டிகளில் நாலந்த கல்லூரி மற்றும் புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்துக் கொண்டன.

புனித சேர்வேஷஸ் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித சேர்வேஷஸ் கல்லூரியும் புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் மோதிக்கொண்டன. முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 8 ஓட்டங்களினால் முன்னிலை வகித்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நிபுன் தனஞ்சய 54 ஓட்டங்களையும் தனுஷ்க நிரஞ்சன் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, புனித ஜோசப் வாஸ் கல்லூரி 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அற்புதமாக பந்துவீசிய சரித் ஹர்ஷண 44 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சுவீகரித்தார்.

இதன்படி 62 ஓட்டங்கள் பின்னிலையில் புனித சேர்வேஷஸ் கல்லூரி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இம்முறை சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் 64.2 ஓவர்களில் 178 ஓட்டங்களைக் குவித்தனர்.

துடுப்பாட்டத்தில் இசுரு உதயங்க 57 ஓட்டங்களையும் சந்துரு நெத்சர 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள பந்துவீச்சில் தனுஷ்க நிரஞ்சன் 5 விக்கெட்டுகளையும் ஆகாஷ் நாணயக்கார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

5 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 98 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி, ஆட்டம் நிறைவடையும் போது விக்கெட் இழப்பேதுமின்றி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சேர்வேஷஸ் கல்லூரி, எதிரணியின் நிபுன் தனஞ்சய (5/33) மற்றும் ஆகாஷ் நாணயக்காரவின் (4/32) சிறப்பான பந்து வீச்சினால் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் சந்துரு நெத்மின அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 116 (39.4) – சந்துரு நெத்மின 46, நிபுன் தனஞ்சய 5/33, ஆகாஷ் நாணயக்கார 4/32

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 197 (70.5) – நிபுன் தனஞ்சய 54, தனுஷ்க நிரஞ்சன் 42, சரித் ஹர்ஷண 6/44

புனித சேர்வேஷஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 178 (64.2) – இசுரு உதயங்க 57, சந்துரு நெத்சர 41, தனுஷ்க நிரஞ்சன் 5/31, ஆகாஷ் நாணயக்கார 3/33

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 7/0 (5)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி.


நாலந்த கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

இன்று நிறைவடைந்த மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக 38 ஓவர்களே வீசப்பட்ட நிலையில் தர்மாசோக கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய தர்மாசோக கல்லூரி 50.4 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்ஷஜித் ருஷான் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய மதுஷான் ஹசரங்க 17 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த நாலந்த கல்லூரி 56.4 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய மலிங்க அமரசிங்க 91 ஓட்டங்களை விளாசினார். தர்மாசோக கல்லூரி சார்பில் கவிந்து மதுஷான் 4 விக்கெட்டுகளையும் ஹர்ஷஜித் ருஷான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய தர்மாசோக கல்லூரி ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 159 (50.4) – ஹர்ஷஜித் ருஷான் 52, மதுஷான் ஹசரங்க 4/17, சுஹங்க விஜேவர்தன 2/16, உமேஷ்க டில்ஷான் 2/45

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 247 (56.4) – மலிங்க அமரசிங்க 91, தசுன் செனவிரத்ன 36, சுஹங்க விஜேவர்தன 31, கவிந்து மதுஷான் 4/80, ஹர்ஷஜித் ருஷான் 3/39, நிமேஷ் மெண்டிஸ் 2/24

தர்மாசோக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 123/4 (29) – கவீஷ் குமார 35, சுஹங்க விஜேவர்தன 2/25

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. நாலந்த கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி.