PCR பரிசோதனையின் பின் ஆஸியில் பயிற்சியை ஆரம்பித்த இந்திய அணி

145
BCCI

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR  பரிசோதனையில் எவருக்கும் கொவிட் – 19 தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்திய வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ரோஹித் சர்மா இல்லாமல் ஆஸி புறப்பட்ட இந்திய அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் நிறைவுக்கு வந்தவுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  

கடந்த 12ஆம் திகதி சிட்னியைடைந்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிட்னி ஒலிம்பிக் பார்க் ஹோட்டலில், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் யாருக்கும் கொவிட் – 19 தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதைத் தொடர்ந்து, இரண்டு நாட்டுகள் ஓய்வுக்குப் பிறகு இந்திய வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். சிட்னியில் உள்ளபிளாக்டவுன்சர்வதேச விளையாட்டு அரங்கில் உயர் பாதுகாப்பு வளையத்தில்ஜிம்மற்றும் உடற்பயிற்சிகளை இந்திய வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபை தனது அதிகாரப்பூர்வடுவிட்டர்வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ”விமானப் பயணம் முடிந்த இரு நாட்களுக்குப் பின் இந்திய அணி வீரர்கள் முதன் முதலாக தங்களது பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்

ஏன் இந்திய, ஆஸி. அணிகள் புதிய ஜேர்ஸிகளுடன் களமிறங்கும்?

கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ப தங்களை தயார் செய்யும் வகையில், மைதானத்தில் ஓட்டம் உள்ளிட்ட சின்னச் சின்ன பயிற்சிகளில் ஈடுபட்டனர்” என தெரிவித்துள்ளது

எதுஎவ்வாறாயினும், இந்திய வீரர்கள் பயிற்சியைத் தொடங்கினாலும், அவுஸ்திரேலியாவில் முதலிரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்களின் சுய தனிமைப்படுத்துதல் காலம் நவம்பர் 25ஆம் திகதி நிறைவுக்கு வருகிறது. இதனையடுத்து நவம்பர் 27ஆம் திகதி முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<