ராஜாஸ்தானின் புதிய பயிற்சியாளராக LSG முன்னாள் பயிற்சியாளர்?

177

இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் புதிய பருவத்திற்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புதிய பயிற்றுவிப்பாளரை நியமிக்க தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  

ஓமான் A அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் அரையிறுதியில் இலங்கை

இந்திய கிரிக்கெட் செய்திச் சேவையான கிரிக்பஸ் (Cricbuzz) வெளியிட்ட தகவல்களுக்கு அமைய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் (LSG) அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் அண்டி பிளவர், ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக மாறுவதற்குரிய பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது 

அதன்படி ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளராக அண்டி பிளவர் மாறுகின்ற சந்தர்ப்பத்திலும், குமார் சங்கக்கார ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக தொடர்ந்து செயற்படுவார் என கூறப்பட்டிருக்கின்றது. குமார் சங்கக்கார இறுதியாக நடைபெற்று முடிந்த IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார் 

அண்டி பிளவர் பயிற்றுவிப்பிலான உள்ளூர் லீக் அணிகளில் சென்.லூசியா ஷூக்ஸ் கடந்த கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றதோடு, முல்டான் சுல்டான்ஸ் (2021) மற்றும் கல்ப் ஜயன்ட்ஸ் (2022) அணிகள் அணிகள் சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றன. இதேநேரம் கடந்த IPL பருவத்தில் அண்டி பிளவர் பயிற்றுவிப்பிலான லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியும் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் கடந்த IPL பருவத்தில் கடைசி இடத்தினைப் பெற்றுக்கொண்ட சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியானது தமது தலைமைப் பயிற்றுவிப்பாளரான பிரையன் லாராவினை புதிய பருவத்தில் பிரதியீடு செய்ய தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. எனினும் சன்ரைஸர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்புக்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை 

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மே.தீவுகள் குழாத்தில் மாற்றம்

இதேவேளை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற மைக் ஹேஸ்ஸன் மற்றும் சஞ்செய் பங்கார் ஆகியோரது பதவிக்காங்கள் நிறைவுக்கு வரும் நிலையில். ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் இருக்கும் பயிற்சியாளர்களின் பதவிக்காலங்கள் புதுப்பிக்கப்படாமல் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<