ஹெஸ்டிங்ஸிற்குப் பதிலாக டயிட்

200
Tait
 

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்று உபாதை காரணமாகத் தொடரை விட்டு வெளியேறிய ஜொஹ்ன் ஹெஸ்டிங்க்ஸிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஷோன் டயிட் இணைந்துள்ளார். 

33 வயதான ஷோன் டயிட் நேற்று கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை ரைசிங் புனே சுப்பர்ஜியான்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குத் தயாராகும் வகையில் அவர் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஷோன் டயிட் ஏற்கனவே இவ்வருட ஐ.பி.எல் ஏலத்தின் போது 1.5 கோடிக்கு ஏலம் போடப்பட்டாலும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இந்நிலையில் ஜொஹ்ன் ஹெஸ்டிங்க்ஸிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் தற்போது கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியினரால் உள்வாங்கப்பட்டுள்ளார். எது எவ்வாராயினும் ஷோன் டயிட் ஏற்கனவே முந்தைய ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்