உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (11) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கேட்டுகொண்டதால், ஆண்டர்சன் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால்...