T20 உலகக் கிண்ணத்திற்குரிய முதற்கட்ட இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

122

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தமது முதற்கட்ட குழாத்தினை அறிவித்துள்ளது.  

T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக பயிற்சி தொடரில் ஆடும் இலங்கை

T20 உலகக் கிண்ணத் தொடர் இம்முறை மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்றது. இந்த தொடருக்காக தற்போது பல்வேறு நாடுகள் தமது அணிக்குழாம்களை வெளியிட்டு வரும் நிலையில் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்படும் இங்கிலாந்து அணியும் 15 பேர் அடங்கிய தமது முதற்கட்ட அணிக்குழாத்தை வெளியிட்டுள்ளது 

அதன்படி அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து குழாத்தில் 35 வயது நிரம்பிய வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் ஜோர்டன் இணைக்கப்பட்டிருக்கின்றார். கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்தின் உள்ளூர் T20 தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டம் மூலம் தேசிய அணியில் ஆடும் வாய்ப்பினை மீண்டும் பெற்றிருக்கின்றார்.   

இவர் தவிர உபாதை காரணமாக கடந்த ஒரு வருட காலமாக அவதிப்பட்டிருந்த மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சரிற்கும் இங்கிலாந்து குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஜொப்ரா ஆர்ச்சர் 2023ஆம் ஆண்டின் மே மாதம் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் போயிருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் 

அதேவேளை அறிமுக சுழல்பந்துவீச்சாளர் டொம் ஹார்ட்லிக்கும் இங்கிலாந்து அணி தமது உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு வழங்கியிருப்பதோடு, கிறிஸ் வோக்ஸ் இற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. டொம் ஹார்ட்லி இந்திய சுற்றுப்பயணத்தின் போது தனது அறிமுக டெஸ்ட் தொடரில் 22 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

T20 உலகக்கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு

T20 உலகக் கிண்ணத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இங்கிலாந்து வீரர்களில் சிலர் தற்போது IPL போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் மே மாதம் 22ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் T20 தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது 

இதேநேரம் இங்கிலாந்து அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரில் குழு B உள்வாங்கப்பட்டிருப்பதோடு அவ்வணி விளையாடும் முதல் போட்டி ஸ்கொட்லாந்துடன் ஜூன் மாதம் 04ஆம் திகதி பார்படோஸில் நடைபெறுகின்றது 

இங்கிலாந்து T20 உலகக் கிண்ண குழாம் 

ஜோஸ் பட்லர் (தலைவர்), பில் ஷோல்ட், வில் ஜேக்ஸ், ஜொன்னி பெயர்ஸ்டோவ், பென் டக்கட், ஹர்ரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி (பிரதி தலைவர்), சேம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், டொம் ஹார்ட்லி, ஆதில் ரஷீட், ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், ரீஸ் டொப்லி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<