அவிஷ்கவின் அதிரடி வீண்; பங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா

169

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் T10 லீக் கிரிக்கெட் தொடரின் நான்காம் நாள் (19) ஆட்டத்தில் மூன்று குழுநிலைப் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் எதிர் கலந்தர்ஸ் 

அபுதாபியின் ஷேக் ஸெயத் மைதானத்தில் முதல் மோதலாக நடந்த இப்போட்டியில் டெக்கான் கிளேடியட்டர்ஸ் அணி 24 ஓட்டங்களால் கலந்தர்ஸ் அணியினை தோற்கடித்தது.

இறுதி இளையோர் போட்டியிலும் இலங்கை அணிக்கு தோல்வி

பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான………

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கலந்தர்ஸ் அணி, முதலில் டெக்கான் கிளேடியட்டர்ஸ் வீரர்களை துடுப்பாட பணித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய டெக்கான் கிளேடியட்டர்ஸ் அணி, ஆப்கான் வீரர் மொஹமட் சஹ்ஷாத் பெற்றுக் கொடுத்த அதிரடி அரைச்சதத்துடன் 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. 

மொஹமட் சஹ்ஷாத் வெறும் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் கலந்தர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோர்ஜ் கார்டன் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 129 ஓட்டங்களை பதிலுக்கு துடுப்பாடிய கலந்தர்ஸ் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவியது. 

கலந்தர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் டாவிட் மலான் 49 ஓட்டங்கள் பெற்று போராட்டத்தினை காட்டிய போதிலும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 128/4 (10) மொஹமட் சஹ்ஷாத் 57(21), ஷேன் வொட்சன் 30(15), ஜோர்ஜ் கார்டன் 21/3(2)

கலந்தர்ஸ் – 104/2 (10) டாவிட் மலன் 49(25)*, பென் கட்டிங் 21/1(2)

முடிவு – டெக்கான் கிளேடியேட்டர்ஸ் 24 ஓட்டங்களால் வெற்றி 

டெல்லி புல்ஸ் எதிர் நோத்தர்ன் வோரியர்ஸ் 

ஷேக் ஸெயத் மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் நோத்தர்ன் வோரியர்ஸ் அணி டெல்லி புல்ஸ் வீரர்களை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி புல்ஸ் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்கவில்லை. எனினும், மத்தியவரிசையில் களம் வந்த டெல்லி புல்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து மோர்கனின் அதிரடியோடு டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.

சிறந்த துடுப்பாட்டத்தை காட்டிய மோர்கன் 28 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

அதேநேரம், நோத்தர்ன் வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் கீறின் 3 விக்கெட்டுக்களையும், அன்ட்ரூ ரசல் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 111 ஓட்டங்களை 10 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய நோத்தர்ன் வோரியர்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கினை 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களுடன் அடைந்தது. 

நோத்தர்ன் வோரியர்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த மேற்கிந்திய தீவுகள் வீரர் நிகோலஸ் பூரன் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர, ரவி ராம்போல் மற்றும் அலி கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றிய போதிலும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டெல்லி புல்ஸ் – 110/6 (10) இயன் மோர்கன் 56(28), கிறிஸ் கீரின் 8/2 (2), அன்ட்ரூ ரசல் 25/2(2)

கிறிஸ் கீரின் – 115/4 (10) நிகோலஸ் பூரன் 56(5)*, அலி கான் 6/1 (1), துஷ்மந்த சமீர 19/1(2)

டீம் அபுதாபி எதிர் பங்ளா டைகர்ஸ் 

ஷேக் ஸெயத் மைதானத்தில் இடம்பெற்ற நான்காம் நாளுக்குரிய கடைசிப் போட்டியில் பங்ளா டைகர்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய திசர பெரேரா தலைமையிலான பங்ளா டைகர்ஸ் அணி அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அட்டகாச ஆட்டத்தோடு 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அணியின் துடுப்பாட்டத்தில் அதன் ஆரம்ப வீரர்களாக வந்த என்ட்ரூ பிளச்சர் 16 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுக்க, ரில்லி ரூசோவ் 21 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதேநேரம் டீம் அபுதாபி அணியின் பந்துவீச்சு சார்பில் பென் லோக்லின் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 130 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டீம் அபுதாபி அணிக்கு இலங்கையின் இளம் வீரரான அவிஷ்க பெர்னாந்து சிறந்த ஆரம்பத்தை தந்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஜொலிக்காத காரணத்தினால், டீம் அபுதாபி அணி 10 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில்……..

டீம் அபுதாபி அணிக்காக போராட்டம் காண்பித்திருந்த அவிஷ்க பெர்னாந்து அரைச்சதம் பெற்று 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடங்கலாக 51 ஓட்டங்கள் குவித்திருந்தார். 

இதேநேரம், பங்ளா டைகர்ஸ் அணியின் வெற்றி கைஸ் அஹ்மட் கைப்பற்றிய 3 விக்கெட்டுக்கள் மூலமும் அதன் தலைவர் திசர பெரேரா கைப்பற்றிய 2 விக்கெட்டுக்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

பங்ளா டைகர்ஸ் ‌– 129/3 (10) ரில்லி ரூசோவ் 44(21)*, அன்ட்ரூ பிளச்சர் 42(16), பென் லோக்லின் 12/2(2)

டீம் அபுதாபி – 102/6 (10) அவிஷ்க பெர்னாந்து 51(21), கயீஸ் அஹ்மட் 8/3 (2), திசர பெரேரா 21/2(2)

முடிவு –  பங்களா டைகர்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<