Home Tamil இலங்கையுடன் சாதனை வெற்றியினைப் பதிவு செய்த ஆப்கான்

இலங்கையுடன் சாதனை வெற்றியினைப் பதிவு செய்த ஆப்கான்

229

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியிருந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் எவை?

மேலும் இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணியானது உலகக் கிண்ணத் தொடர்களில் முதன் முறையாக இலங்கைக்கு எதிராக வெற்றியினையும் பதிவு செய்கின்றது.

முன்னதாக இந்தியாவின் புனேவில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கான் அணியின் தலைவர் ஹஸ்மதுல்லா சஹிதி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியிருந்தது. அந்தவகையில் உபாதைக்கு உள்ளாகி உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார துஷ்மன்த சமீர மூலம் பிரதியீடு செய்யப்பட, குசல் ஜனித் பெரேரா திமுத் கருணாரட்னவினால் மாற்றீடு செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்சான் மதுசங்க

ஆப்கானிஸ்தான் XI

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், றஹ்மத் சாஹ், ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், இக்ராம் அலிகில், மொஹமட் நபி, ரஷீட் கான், நவீன் உல் ஹக், பசால்ஹக் பரூக்கி, நூர் அஹ்மட்

தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக திமுத் கருணாரட்ன மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் வர இலங்கை கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தது. இலங்கை அணிக்காக ஆரம்பவீரர்களாக வந்தவர்களில் திமுத் கருணாரட்ன போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே பசால்ஹக் பரூக்கியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்து 15 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். இதனால் இலங்கை தொடக்கத்தில் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து மோசமான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும்  இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்டத்தின் நிறைவாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 5 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதன் பின்னர் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ், சதீரம சமவிக்ரமவுடன் இணைந்து 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து இலங்கை அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 39 ஓட்டங்கள் எடுத்திருந்தார். குசல் மெண்டிஸின் விக்கெட்டினை அடுத்து சதீரவும் 36 ஓட்டங்களோடு ஓய்வறை செல்ல, இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்ததோடு ஒரு கட்டத்தில் 185 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இலங்கை அணியின் 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக அஞ்செலோ மெதிவ்ஸ் – மகீஸ் தீக்ஷன ஜோடி 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 241 ஓட்டங்களை எடுத்தது.

>>இலங்கை அணியின் பிரபல ரசிகர் “அங்கில் பேர்சி” மரணம்

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசை வீரர்களில் ஒருவராக வந்த மகீஸ் தீக்ஷன 29 ஓட்டங்களை எடுக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் பசால்ஹக் பரூக்கி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, முஜீப் 02 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 242 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 242 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திய அதன் துடுப்பாட்டத்தில் அஷ்மத்துல்லா ஒமர்சாய் இறுதிவரை ஆட்டமிழக்காது 73 ஓட்டங்கள்  எடுக்க, றஹ்மத் சாஹ் 62 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் ஹஸ்மத்துல்லா சஹிதி 58 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றிக்கு உதவினார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்சான் மதுசங்க 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ஆப்கான் அணி பந்துவீச்சாளர் பசால்ஹக் பரூக்கி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Afghanistan
242/3 (45.2)

Sri Lanka
241/10 (49.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Rahmanullah Gurbaz b Azmatullah Omarzai 46 60 5 0 76.67
Dimuth Karunaratne lbw b Fazal Haq Farooqi 15 21 1 0 71.43
Kusal Mendis c Najibullah Zadran b Mujeeb ur Rahman 39 50 3 0 78.00
Sadeera Samarawickrama lbw b Mujeeb ur Rahman 36 40 3 0 90.00
Charith Asalanka c Rashid Khan b Fazal Haq Farooqi 22 28 2 0 78.57
Dhananjaya de Silva b Rashid Khan 14 26 1 0 53.85
Angelo Mathews c Mohammad Nabi b Fazal Haq Farooqi 23 26 1 1 88.46
Dushmantha Chameera run out (Ibrahim Zadran) 1 4 0 0 25.00
Mahesh Theekshana b Fazal Haq Farooqi 29 31 3 1 93.55
Kasun Rajitha run out (Rahmanullah Gurbaz) 5 7 0 0 71.43
Dilshan Madushanka not out 0 4 0 0 0.00


Extras 11 (b 0 , lb 2 , nb 0, w 9, pen 0)
Total 241/10 (49.3 Overs, RR: 4.87)
Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 10 0 38 2 3.80
Fazal Haq Farooqi 10 1 34 4 3.40
Naveen ul Haq 6.3 0 47 0 7.46
Azmatullah Omarzai 7 0 37 1 5.29
Rashid Khan 10 0 50 1 5.00
Mohammad Nabi 6 0 33 0 5.50


Batsmen R B 4s 6s SR
Rahmanullah Gurbaz lbw b Dilshan Madushanka 0 4 0 0 0.00
Ibrahim Zadran c Dimuth Karunaratne b Dilshan Madushanka 39 57 4 1 68.42
Rahmat Shah c Dimuth Karunaratne b Kasun Rajitha 62 74 7 0 83.78
Hashmatullah Shahidi not out 58 74 2 1 78.38
Azmatullah Omarzai not out 73 63 6 3 115.87


Extras 10 (b 0 , lb 1 , nb 0, w 9, pen 0)
Total 242/3 (45.2 Overs, RR: 5.34)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 9 0 48 2 5.33
Kasun Rajitha 10 0 48 1 4.80
Angelo Mathews 3 0 18 0 6.00
Dushmantha Chameera 9.2 0 51 0 5.54
Mahesh Theekshana 10 0 55 0 5.50
Dhananjaya de Silva 4 0 21 0 5.25



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<