இலகு வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார், ரெட் ஸ்டார்ஸ் அணிகள்

Super League 2021

153

முறையே ரட்னம் மற்றும் புளூ ஈகல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த புளூ ஸ்டார் மற்றும் ரெட் ஸ்டார்ஸ் அணிகள் அங்குரார்ப்பண சுபர் லீக் கால்பந்து தொடரில் தமது இரண்டாவது வெற்றிகளை சுவைத்தன 

இந்த இரண்டு ஆட்டங்களும் சனிக்கிழமை (01) சுகததாஸ அரங்கில் சுபர் லீக் தொடரின் மூன்றாவது வாரத்திற்கான ஆட்டங்களாக இடம்பெற்றன 

புளூ ஸ்டார் வி.க எதிர் ரட்னம் வி.க 

ரட்னம் வீரர்கள் தாம் இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் நிறைவு செய்த நிலையிலும், புளூ ஸ்டார் வீரர்கள் தமது முன்னயை போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்ற நிலையிலும் இன்றைய இந்த மோதலில் களம் கண்டனர். 

ஆட்டம் ஆரம்பமாகி 15ஆவது நிமிடத்தில் மைதானத்தின் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தின்மூலம் இளம் வீரர் இஹ்சான் புளூ ஸ்டார் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

நியு யங்ஸை இலகுவாக வீழ்த்திய சீ ஹோக்ஸ் அணிக்கு மூன்றாவது வெற்றி

அந்த கோல் பெறப்பட்டு இரண்டு நிமிடங்களுக்குள், எதிரணி வீரரின் கால்களில் இருந்து பந்தைப் பரித்த அர்ஷாட் மத்திய களத்தில் இருந்து பந்தை கோலுக்குள் உதைந்து புளூ ஸ்டார் அணிக்கான அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

மீண்டும் செனால் சந்தேஷ் 36ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் அணிக்கான அடுத்த கோலையும் பெற, முதல் பாதியில் 3 கோல்களினால் அவ்வணி முன்னிலை பெற்றது. 

இரண்டாம் பாதியிலும் முதல் பாதி போன்று புளூ ஸ்டார் அணி கோலுக்கான பல வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், இலகுவான வாய்ப்புக்கள் உட்பட அனைத்தும் கோலாக்கப்படாமல் வீணானது. 

ரட்னம் வீரர்களும் இரண்டாம் பாதியில் கோலுக்கு ஏற்படுத்திய முயற்சிகள் பயனளிக்காத நிலையில், ஆட்ட நிறைவில் 3-0 என புளூ ஸ்டார் வெற்றி பெற்று, தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. தொடரில் ரட்னம் அணி இதுவரை எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை. 

முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 3 – 0 ரட்னம் வி.க

கோல் பெற்றவர்கள் 

  • புளூ ஸ்டார் வி.க –  மொஹமட் இஹ்சான் 15’, மொஹமட் அர்ஷாட் 17’, செனால் சந்தேஷ் 36’ 

ரெட் ஸ்டார்ஸ் கா.க எதிர் புளூ ஈகல்ஸ் கா.க  

இந்தப் போட்டியில் மோதிய ரெட் ஸ்டார்ஸ் வீரர்கள் இதற்கு முன்னைய போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு சமநிலையான முடிவுகளைப் பெற்றிருந்தனர். புளூ ஈகல்ஸ் வீரர்கள் ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றிருந்தனர். 

Video- தனது முன்னாள் அணிக்கெதிராக சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் களமிறங்க தயாராகும் HAZARD ! | FOOTBALL ULAGAM

எனினும், இந்தப் போட்டியில் புளூ ஈகல்ஸ் பின்கள வீரர்கள் விட்ட தவறைப் பயன்படுத்திய ரெட் ஸ்டார்ஸ் அணி பர்ஹான், ரிஸ்லான் மற்றும் டிலக்ஷன் ஆகியோர் மூலம் முதல் 25 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களைப் பெற்றது. அதன் பின்னரும் ரெட் ஸ்டார்ஸ் அணியினர் பக்கமே போட்டியின் ஆதிக்கம் நீடித்தது. 

இரண்டாவது பாதியில் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் அபுமெரெ 20 நிமிட இடைவெளியில் ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்ய, ஆட்டம் நிறைவில் 6-0 என ரெட் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இதுவரையில் மிகப் பெரிய கோல் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகவும் இந்த வெற்றி பதிவாகியது. 

மறுமுனையில், அபுமெரெ பெற்ற ஹெட்ரிக் கோல் இந்த தொடரில் பதிவாகிய நான்காவது ஹெட்ரிக் கோலாகும். 

முழு நேரம்: ரெட் ஸ்டார்ஸ் கா.க 6 – 0 புளூ ஈகல்ஸ் கா.க 

கோல் பெற்றவர்கள் – 

  • ரெட் ஸ்டார்ஸ் கா.க – மொஹமட் பர்ஹான் 10‘ மொஹமட் ரிஸ்லான் 19’, டிலக்ஷன் 23’, இஸ்மயில் அபுமெரெ 63’, 71’ & 80’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<