நான் பயங்கரவாதியா?: கவலை வெளியிடும் ஷகிப் மஹ்மூட்

66

சமூக வலைத்தளங்களில் தன்னை பயங்கரவாதி என சாயம் பூசுகின்றமை தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷகிப் மஹ்மூட் கவலை வெளியிட்டுள்ளார்.  
இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் அணியான
லயன்ஸ் அணியின் இந்தியாவிற்கான விஜயத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவர் இந்த கருத்தைக் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து T20, டெஸ்ட் குழாம்கள் வெளியீடு

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள …….

எதிர்வரும் நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் மற்றும் T20i தொடர்களுக்கான குழாம்களில் அனுபவமற்ற வீரரான வேகப் பந்துவீச்சாளர் ஷகிப் மஹ்மூட் இணைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவிற்கு செல்வதற்கு ஷகிப் மஹ்மூட்டிற்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது.  

இது இவ்வாறிருக்க, திடீரென பலரும் சமூக வலைத்தளங்களில் தன்னை பயங்கரவாதியாக சித்தரிப்பதாக குறிப்பிட்ட ஷகிப் மஹ்மூட், தான் எந்த தவறையும் செய்யவில்லை என கூறியுள்ளார்

கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டால் தான் சதி செயற்பாடுகளில் ஈடுபடுவேன் என மக்கள் நினைக்கின்றார்கள் என அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.  

இங்கிலாந்தில் இடம்பெறும் பிரிவு இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஷகிப் மஹ்மூட், இங்கிலாந்து அணியில் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.  

இவ்வாறு இங்கிலாந்து தேசிய அணிக்கு இணைக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த ஷகிப் மஹ்மூட் ”நான் இங்கிலாந்து அணிக்கு தெரிவுசெய்யப்பட்டமை குறித்த செய்தி அறிந்த பின்னர் மூளை சிறிது நேரம் வெற்றிடமானதாக உணர்ந்தேன்” என கூறியுள்ளார்.

ஷகிப் மஹ்மூட்டை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சொஹைப் அக்தார் மற்றும் இங்கிலாந்து அணி சார்பில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜேம்ஸ் அண்டசன் ஆகியோர் அண்மையில் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.