இங்கிலாந்து அணியின் உப தலைவரானார் ஸ்டுவர்ட் பிரோட்

100

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராக ஸ்டுவர்ட் பிரோட் நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது

இந்த தொடரில் அந்த அணியின் உப தலைவர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதேபோல, ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் உப தலைவராகச் செயல்படும் ஜோஸ் பட்லருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அறிமுகமாகும் புதிய விதிகள்

இதனால், இங்கிலாந்து உப தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. எனவே, அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அந்த அணியின் சிரேஷ்ட வீரர் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட்டை உப தலைவராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்காக பிரோட் 3 ஒருநாள், 27 T20 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு அதில் முறையே 2 மற்றும் 11 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே, பென் ஸ்டோக்ஸ் அணிக்குத் திரும்பும்போது மீண்டும் அவர் உப தலைவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…