சாதனைப் பட்டியலில் சங்காவைக் கடந்த ஸ்மித்

54
©Getty Image

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மென்செஸ்டரில் நடைபெற்றுவரும் ஆஷஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் கடந்து இரட்டை சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் நான்கு சாதனை பட்டியல்களில் தனது பெயரைப் பதித்துள்ளார்.  

டெஸ்ட் வரலாற்றில் இளம் அணித்தலைவராக இடம்பிடித்த ரஷீட் கான்

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு ……..

அவுஸ்திரேலிய அணிக்காக தனது 67ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் நேற்று (05) நிறைவுக்குவந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது சதமடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 26ஆவது சதத்தை பதிவு செய்தார். குறித்த 26 சதங்கள் மூலம் கிரிக்கெட் உலகில் லிட்டில் மாஸ்டர் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் ஒரு சாதனையை முடியடித்துள்ளார்.  

குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 26 சதங்களை கடந்தவர்கள் வரிசையிலேயே ஸ்டீவ் ஸ்மித் இவ்வாறு சச்சினை முந்தியுள்ளதுடன் குறித்த பட்டியலில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார். பட்டியலின் முதலிடத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேர். டொன் ப்ரெட்மென் காணப்படுகின்றார்.  

குறைந்த இன்னிங்ஸ்களில் 26 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியல்.

 1. சேர். டொன் ப்ரெட்மென் (அவுஸ்திரேலியா) – 69 இன்னிங்ஸ்
 2. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 121 இன்னிங்ஸ்
 3. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 136 இன்னிங்ஸ்
 4. சுனில் கவாஸ்கர் (இந்தியா) – 144 இன்னிங்ஸ்
 5. மெத்யூ ஹெய்டன் (அவுஸ்திரேலியா) – 145 இன்னிங்ஸ்

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு சதங்கள் மற்றும் நேற்று (05) பெற்ற சதத்துடன் டெஸ்ட் தொடர் ஒன்றின் போது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அதிக தடவைகள் பெற்றவர்கள் வரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஜெக் கலிஸின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்துள்ளார்.  

மேலும், நேற்றைய சதத்தின் உதவியுடன் டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் பெற்றவர்கள் வரிசையில் 11 சதங்களை இங்கிலாந்து அணிக்கெதிராக விளாசி குறித்த பட்டியில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் சாதனையை முடியடித்துள்ளார்

அத்துடன் குறித்த பட்டியலில் நான்காவது வீரராகவும் ஸ்மித் இடம்பெற்றுள்ளதுடன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் சமன் செய்துள்ளார்

குறித்த ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள்

 1. சேர். டொன் ப்ரெட்மென் (அவுஸ்திரேலியா) 19 சதங்கள்எதிர் இங்கிலாந்து
 2. சுனில் கவாஸ்கர் (இந்தியா) 13 சதங்கள்எதிர் மேற்கிந்திய தீவுகள்
 3. சேர் ஜெக் ஹோப்ஸ் (இங்கிலாந்து) 12 சதங்கள்எதிர் அவுஸ்திரேலியா
 4. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) 11 சதங்கள்எதிர் இங்கிலாந்து
 5. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 11 சதங்கள்எதிர் அவுஸ்திரேலியா
 6. குமார் சங்கக்கார (இலங்கை) 10 சதங்கள்எதிர் பாகிஸ்தான்

T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ………..

இது மாத்திரமல்லாது மூன்று ஆஷஸ் தொடர்களில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை தற்போது ஸ்டீவ் ஸ்மித் குவித்துள்ளார். நடப்பு ஆஷஸ் தொடரில் இதுவரையில் வெறும் நான்கு இன்னிங்ஸ்களில் 589 ஓட்டங்களை இவர் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஒரு வருட கிரிக்கெட் தடையையும் கடந்து இன்றுவரையில் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 3 இரட்டை சதங்கள், 26 சதங்கள் மற்றும் 25 அரைச்சதங்களுடன் மொத்தமாக 6,788 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் தற்போது டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் ஸ்மித் முதலிடத்தில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<