மூன்றாவது டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆடுவாரா?

18
Shreyas Iyer an injury doubt

இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>> நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்ளடங்கும் இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்து தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கின்றது.

இந்த நிலையில் இந்திய – இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதுகு உபாதை காரணமாகவே தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. எனினும் ஸ்ரேயாஸ் அய்யரின் உபாதை தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை இந்திய – இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 15ஆம் திகதி ராஜ்கொட்டில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<