சிரேஷ்ட வீரர்களின் சிறப்பாட்டத்தினால் யாழ் சென். ஜோன்சிற்கு வெற்றி

264

சிங்கர் கிணத்திற்காக பிரிவு II இல் ஆடிவரும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் பாணந்துறை சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமான இரண்டு நாட்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றியினை பெற்றுள்ளது.

தற்போது குழு D இல் இரண்டாவது இடத்திலிருக்கும் பாணந்துறை சென். ஜோன்ஸ் வீரர்கள், ஜயவர்தனபுர மகா வித்தியாலய அணிக்கு எதிரான போட்டியிலடைந்த பின்னடைவின் காரணமாக குழு C இல் முதலாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சறுக்கியிருக்கும் யாழ் வீரர்களை எதிர்கொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

நேற்றைய தினம் (7) நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த யாழ் வீரர்களுக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சௌமியன் 42 ஓட்டங்களை சேகரித்தபோதும் ஏனைய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி தடுமாற்றம் கண்டது. 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்திருந்த யாழ் தரப்பிற்கு மத்திய வரிசையில் அபினாஷ் 47 ஓட்டங்களையும், 7 ஆவது இலக்கத்தில் களம்புகுந்த எல்சான் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க யாழ் வீரர்கள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர்களான சசித்த, தமிந்து ஜோடி 7 விக்கெட்டுக்களை பகிர்ந்திருந்தனர்.

பாணந்துறை தரப்பின் முதல் 3 விக்கெட்டுக்களும் 40 ஓட்டங்களுக்கு சரிக்கப்பட்டது. எனினும், அஷான் 28 ஓட்டங்களை சேகரித்து ஆட்டமிழக்க 184. என்ற இலக்கை நோக்கி பாணந்துறை வீரர்கள் இலகுவாக நகர்ந்தனர். ஒரு முனையில் தமிந்து ஓட்டங்களை சேகரிக்க மறுமுனையில் யாழ் சென். ஜோன்ஸின் அபினாஷ், சரண் ஜோடி விக்கெட்டுக்களை சாய்ந்தனர். 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அபினாஷ் தொடர்ச்சியான 5 விக்கெட்டுகள் பெறுதியொன்றை பதிவுசெய்ய 22 ஓட்டங்களால் முதலாவது இன்னிங்சில் பாணந்துறை ஜோனியன்ஸ் பின்தங்கி காணப்பட்டனர்.

Photo Album – St.John’s College, Jaffna vs St.John’s College, panadura | Day 02 | U19 Division II | Traditional

இரண்டாவது இன்னிங்சில் யாழ் சென். ஜோன்சின் மூன்று விக்கெட்டுக்களை வெறுமனே 4 ஓட்டங்களுக்கு பாணந்துறை வீரர்கள் பறித்தனர். ஐந்தாம் இலக்கத்தில் களமிறங்கிய டினோசன் பெறுமதியான 43 ஓட்டங்களுடன் 79 ஓட்டங்களை யாழ் வீரர்கள் சேகரித்தனர். எனினும் வினோஜன் (29), அபினாஷ் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க மீண்டும் யாழ் வீரர்கள் நெருக்கடிக்குள்ளாகினர். ஒரு முனையில் அபிஷேக் நிதானமாக துடுப்பாட மறுமுனையில் விக்கெட்டுக்களை இடது கை சுழல் பந்துவீச்சாளர் சசித விரைவாக சாய்த்தார்.

152 என்ற இலகுவான வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய பாணந்துறை சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர்களின் விக்கெட்டுக்களை ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் சாய்த்த யாழ். சென் ஜோன்சின் பந்துவீச்சாளர்கள் பாணந்துறை சென். ஜோன்ஸிற்கு எதிராக 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

யாழ் சென். ஜோன்ஸ் சார்பில்  தொடர்ச்சியாக பந்துவீச்சில் சோபித்துவரும் அபினாஷ் 4 விக்கெட்டுக்களையும், மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் சரண் 3 விக்கெட்டுக்களையும், உப தலைவர் சௌமியன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

சாலிந்த உஷானின் சதத்துடன் நீர்கொழும்பு பதுரெலிய போட்டி சமநிலையில் முடிவு

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இந்த பருவகாலத்தில் 11 போட்டிகளை நிறைவு செய்துள்ளபோதும், இதுவரையில் சீரான துடுப்பாட்ட வரிசையொன்றினை அமைத்துக்கொள்வதில் பெரும் சவாலை எதிர்கொள்கின்றது, அவ்வாறே திறன் வாய்ந்த இளைய வீரர்களை அணியில் உள்வாங்கியிருக்கின்ற போதும் அணிக்கு அவர்களிடமிருந்து பங்களிப்பை பெறுவதிலும் தடுமாறி வருகின்றனர். ஆனால் சிரேஷ்ட வீரர்கள் பிராகாசித்து வருவதால் இந்த தடுமாற்றம் இறுதி முடிவுகளில் அவ்வளவாக தாக்கம் செலுத்துவதில்லை. எதிர்வரும் போட்டிகளுக்குள் ஓர் அணியாக இணைந்து பிரகாசிக்கும் போது பயிற்றுவிப்பாளர் லவேந்திராவில் வழிகாட்டலின் கீழ் தொடர்ச்சியான வெற்றிகளை உறுதிசெய்யலாம்.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 184 (63.5) – மேர்ஃபின் அபினாஷ் 47, நாகேந்திரராசா சௌமியன் 42, எல்சான் டெனுசன் 33, சசித் மனுபிரிய 4/40, தமிந்து நிவரத்ன 3/33  

சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (முதல் இன்னிங்ஸ்) – 162 (56.2) – தமிந்து நிவரத்ன 61, அஷான் டில்ஹர 28, மேர்ஃபின் அபினாஷ்  5/51, சரண் 3/34

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 129 (41.4) தெய்வேந்திரம் டினோசன்  43, வினோஜன் 29, சசித மனுபிரிய 6/41 ,  

சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 96 (28.1)  – மேர்ஃபின் அபினாஷ் 4/29, சரண் 3/10, நாகேந்திரராசா சௌமியன் 2/20

முடிவு – யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 55 ஓட்டங்களால் வெற்றி.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<