9ஆவது பெனால்டியில் புனித பத்திரிசியாரை வீழ்த்தி சம்பியனாகிய புனித ஹென்ரியரசர்

271

ஐந்தாவது முறையாக நடாத்தப்படுகின்ற மைலோ கிண்ண கால்பந்து தொடரின் ஓர் அங்கமாக இந்த வருடம் இடம்பெற்ற யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரியை பலத்த போராட்டத்தின் பின்னர் வெற்றி கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியன் பட்டத்தினை தமதாக்கியது. அதேவேளை, முன்றாமிடத்தினை கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

இறுதிப் போட்டி

வட மாகாண கால்பந்தில் பெரும் பலம்கொண்ட அணிகளான யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிகள் மோதியிருந்த இப்போட்டியில் முதற் பத்து நிமிடங்களுக்கும் இரு அணியினது முன்கள வீர்கள் பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் மறு அணியினது பின் களம் தாண்டுவதே சவாலாக இருந்தது.   

மைலோ இறுதி மோதலில் புனித பத்திரிசியார், மணற்காடு, புனித ஹென்றியரசர் அணிகள்

தற்பொழுது நடைபெற்று வரும் 5 ஆவது மைலோ கிண்ண..

ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் பத்திரிசியாரின் வினிதனினால் கோலினை நோக்கி உதையப்பட்ட ப்ரீ கிக் பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

18ஆவது மற்றும் 19ஆவது நிமிடங்களில் பிரசாந்த், சானுஜன் ஆகியோரால் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பத்திரிசியாரின் ஸ்ரெனோவால் தடுக்கப்பட்டன.

இரு அணிகளினதும் பின்களம் பலமாகவிருக்க கோலேதுமின்றி நிறைவிற்கு வந்தது முதல் பாதி.

முதல் பாதி: புனித ஹென்றியரசர் கல்லூரி 0 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

தெடர்ந்தும் ஆரம்பமான போட்டியில் பிரசாந்த் உதைந்த பந்தினை பத்திரிசியாரின் கோல் காப்பாளர் தடுத்தார். அவ்வணியின் டிலக்சன் கோலிற்குள் அனுப்பிய பந்தும் எதிரணி கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.  

31ஆவது நிமிடத்தில் ஹென்றிஸின் ஜினோல்ட்டன் உதைந்த பந்து மயிரிழையில்  கோலிற்கு வெளியே சென்றது.

பத்திரிசியார் சார்பாக டிலக்சன் மேற்கொண்ட முயற்சியின்போது, பந்து கோலிற்கு வெளியே சென்றது. 33ஆவது நிமிடத்தில் ஹென்றிசின் ஜெலக்சன் வழங்கிய பந்தினை அருள் ஜோசப் கோலாக்க முயற்சித்த போதும் பத்திரிசியாரின் பின்கள வீரர்கள் அதனை சிறப்பாகத் தடுத்தனர்.  

ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் டைனியஸ் கோணரிலிருந்து உதைந்த பந்தினை தலையால் முட்டி கோலாக்கினார் பத்திரிசியார் வீரர் டிலக்சன்.  

எந்தவித வெற்றியுமின்றி நாடு திரும்பும் இலங்கை கனிஷ்ட அணி

தஜிகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் 19 வயதுக்கு…

போட்டியின் 40ஆவது நிமிடத்தில் ஹென்றியரசர் கல்லூரியினருக்கு கிடைத்த ப்ரீ கிக் பந்தினை பிரசாந்த், சக வீரர் கிருசாந்தனை நோக்கி உதைய, அப்பந்து பெனால்டி எல்லையின் உள்ளே எதிரணி வீரரின் கைகளில் பட்டதால் ஹென்றியரசர் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது.

கிடைத்த பெனால்டியினை சிறப்பாகப் பயன்படுத்தி கோல் கணக்கினை சமன் செய்தார் இளவாலை வீரர் பிரசாந்த்.   

முழு நேரம்: புனித ஹென்றியரசர் கல்லூரி 1-1 புனித பத்திரிசியார் கல்லூரி

ஆட்ட நேர நிறைவில் போட்டி 1-1 என சமநிலையடைந்தது. எனவே, வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமநிலைத் தவிர்ப்பு உதையின் போது (பெனால்டி) இரு கல்லூரி  வீரர்களும் கோல் காப்பாளர்களை மாற்றி, மாற்றி பரிசோதித்த போதும் இறுதியாக பத்திரிசியார் கல்லூரி அணியின் 9ஆவது வீரரின் உதையினை ஹென்ரியரசர் தரப்பினர் தடுக்க, அவ்வணி 09:08 என வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தினை தம்வசப்படுத்தியது.

போட்டி முடிவு சமநிலைத் தவிர்ப்பு உதையில் 9:8 என்ற கோல் கணக்கில் புனித ஹென்றியரசர் கல்லூரி வெற்றி

கோல் பெற்றவர்கள்  

புனித பத்திரிசியார் கல்லூரி – அன்ரன் பவளநாயகம் டிலக்சன் 37’
புனித ஹென்றியரசர் கல்லூரி – மரியனேசன் பிரசாந்த் 40’


மூன்றாவது இடத்திற்கான போட்டி

அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்த நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கொற்றாவத்தை அமெரிக்க மிசன் கல்லூரி அணிகள் மூன்றாம் இடத்திற்கான இந்த மோதிலில் பங்குகொண்டன.

இப்போட்டியில், 10ஆவது நிமிடத்தில் அமெரிக்க மிஷன் அணியின் விஷ்ணு பிரியன் ஒரு கோலினைப் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். அதன் பின்னர் முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.  

உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறும் இறுதிக்கட்ட பலப்பரீட்சை ஆரம்பம்

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்…

இரண்டாவது பாதியாட்டத்தின் போது, 26ஆவது நிமிடத்தில் வைஷ்ணவன் மேலும் ஒரு கோலினைப் போட, ஆட்டநேர நிறைவில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் கல்லூரி வெற்றியைத் தமதாக்கி தொடரின் மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.

கோல் பெற்றவர்கள்  

கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை சிவகுமார் விஷ்ணுபிரியன் 10’, அசோகபதி வைஷ்ணவன் 26


மைலோ கிண்ண போட்டிகள் 2017

16 வயதிற்குட்பட்ட பிரிவிற்கான விருதுகள்

சம்பியன் அணி – புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை
இரண்டாவது இடம் – புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்
மூன்றாவது இடம் – கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் கல்லூரி
நான்காவது இடம் – நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
கனவான் அணி (Fair Play) – நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – மரியநாயகம் பிரசாந்த் – புனித ஹென்றியரசர் கல்லூரி
தொடர் நாயகன் – எக்மன் டைனியஸ் – புனித பத்திரிசியார் கல்லூரி
சிறந்த கோல் காப்பாளர் – பரமேஸ்வரன் பகலவன் – புனித ஹென்றியரசர் கல்லூரி