2ஆவது நாள் இலங்கை அபிவிருத்தி அணியின் கையில்

196
sri lanka v south africa emerging

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அபிவிருத்தி அணியினர்  முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியுடன்  சென்வஸ் பார்க்  மைதானத்தில் மோதி வருகின்றது .

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும்  விளையாட்டு அணியினர் தனது முதலாவது நாள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றனர்.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும்  விளையாட்டு அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்மித் முதல் நாள் முடிவில்  13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து 2 ஆவது நாளில் களமிறங்கிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணியினர் 396 ஓட்டங்களுக்கு  சகல விக்கட்டுகளையும் இழந்தனர்.

இலங்கை அபிவிருத்தி அணி சார்பாகப் பந்துவீச்சில் அபோன்சோ 95 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

விஜேரத்ன 76 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். குருகெர் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அபிவிருத்தி அணியினர் போர்டுன் யின் அபாரப் பந்துவீச்சின் காரணமாக 9 விக்கட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் சதுரங்க ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைக் குவித்தார். சந்துன் வீரக்கொடி 56 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போர்டுன் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்கப்பட்டார்.

போர்டுன் 99 ஓட்டங்களைக் கொடுத்து  6 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். சிக்கவிலி 90 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். 3 ஆவது நாள் எந்த அணிக்கு சாதகம் என்பதை பார்ப்போம்.

போட்டியின் சுருக்கம் :

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் விளையாட்டு அணி – 394

ஸ்மித் 124*, டு ப்ளூய் 46, கோமாரி 43, மகன்யா 30, குருக்கர் 59*

அமிலோ அபோன்சோ 5/95, விஜேரத்தன 2/76, சதுரங்க 1/92, புத்திக்க 1/29

இலங்கை அபிவிருத்தி அணியினர் – 299/9

சஞ்சய சதுரங்க 74*, சந்துன் வீரக்கொடி 56, அணுக் பெர்னாண்டோ 39

போர்டுன் 6/99, சிக்கவிலி 2/90, சிமித் 1/9