ஆசிய கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்டத் தொடரில் சாதிக்குமா இலங்கை?

115

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான ஆசிய கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்ககேற்கவுள்ள இலங்கை அணி, இன்று (08) வியட்நாம் நோக்கி பயணமாகவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்முறைப் போட்டித் தொடரில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா, சைனீஸ் தாய்ப்பே, கஸகஸ்தான், இந்தியா, ஈரான், அவுஸ்திரேலியா, மக்காவோ, ஹொங்கொங், நியுஸிலாந்து, உஸ்பகிஸ்தான், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய 16 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளன.

மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடர் இவ்வார இறுதியில்

இதில் குழு டி யில் நியூசிலாந்து, உஸ்பகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளுடன் இலங்கை அணி போட்டியிடவுள்ளது.

இதேநேரம், இலங்கை கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்ட அணியின் தலைவியாக ஆணமடுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் தினூஷா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அக்கல்லூரியைச் சேர்ந்த 4 வீராங்கனைகள் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்நிலையில் இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக சுமேத விமலவீரவும், உதவிப் பயிற்றுவிப்பாளராக தாரக்க ரத்னவீரவும், உடற்கூற்று மருத்துவராக மொரிஸ் சமிந்தவும், அணியின் பெண் அதிகாரியாக புஷ்பா பொத்தேஜுவும், அணியின் முகாமையாளராக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் மஞ்சுள காரியவசமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்டப் போட்டியில் 15 நாடுகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் இலங்கை அணி பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி கடைசி இடத்தை பெற்றுக்கொண்டது.

நட்பு ரீதியிலான அழைப்பு வலைப்பந்து சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை

இதேநேரம், குறித்த போட்டித் தொடரில் சீன அணி சம்பியனாகத் தெரிவாகியதுடன், இரண்டாவது இடத்தை ஜப்பானும், மூன்றாவது இடத்தை தாய்லாந்தும் பெற்றுக்கொண்டன.

இலங்கை கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்ட குழாம்

எச்.எம் தினூஷா தில்ருக்ஷி (ஆணமடுவ மத்திய கல்லூரி), சிஹாரா செவ்மினி (ஆணமடுவ மத்திய கல்லூரி), எச்..பி நிபுனி அயோத்யா (ஆணமடுவ மத்திய கல்லூரி), டபிள்யூ.கே பியுமி ஹாசினி (ஆணமடுவ மத்திய கல்லூரி), ரஷினி இஷாரா (நாத்தான்டிய தம்மிஸ்ஸ மத்திய கல்லூரி), பி. சங்சலா நெத்மினி (இளையோர் சம்மேளனம்), பி.டீ ரிஷிநேத்ரா பாலசூரிய (லும்பினி கல்லூரி), நெத்மி கௌஷல்யா நவாங்ஜன (ஹுங்கம விஜயபா தேசிய பாடசாலை), .. செவ்வன்தி