இலங்கை – உலக பதினோருவர் கண்காட்சிப் போட்டி ஒத்திவைப்பு

2102
Sri Lanka XI vs World XI

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கு இடையில் வரும் செப்டம்பர் 8ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் நடாத்த ஏற்பாடாகி இருந்த நலன்புரி கண்காட்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி20..

“2019 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு வீரர் மேலாண்மை மற்றும் காயங்களை தடுப்பது குறித்து நிர்வாகத்தினர் அதிக அவதானம் செலுத்துகின்றனர். காயங்கள் மற்றும் ஏனைய சிக்கல்கள் தொடர்பில் நெருக்கடி இருப்பதால் இந்த தருணத்தில் போட்டியை நடாத்துவது விவேகமற்றது என்ற தொழில்நுட்ப குழுவின் மதிப்பீட்டுக்கு அமைய கண்காட்சிப் போட்டியை பின்னர் ஒரு திகதிக்கு பிற்போடுவதற்கு நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது என்று இலங்கை கிரிக்கெட் (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கும் நோக்கிலேயே இந்த கண்காட்சிப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெற்றோரை இழந்த சிறுவர்கள், விதவை தாய்மார்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் தொடர்பில் சிறப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதிகள் இலங்கை கிரிக்கெட்டின் தொண்டு அமைப்பான கிரிக்கெட் எயிட் (Cricket Aid) ஊடாக விநியோகிக்கப்படும். இதன்போது அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் கிராம சேவகர் அலுவலகங்கள் ஊடாக மாதாந்த உதவித் தொகை மற்றும் ஊக்க கொடுப்பனவுகளாக இந்த நிதி விநியோகிக்கப்படும்.    

ஓய்வு பெற்ற மற்றும் தற்போது விளையாடி வரும் வீரர்களான ரொபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா மற்றும் யூசுப் பதான் (இந்தியா), ஷஹிட் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் மற்றும் அப்துல் ரஸ்ஸாக் (பாகிஸ்தான்), டைமல் மில்ஸ் (இங்கிலாந்து), கிராம் கிரீமர் (ஜிம்பாப்வே), லுக் ரொன்சி (நியூஸிலாந்து), ஜே.பி. டுமினி மற்றும் பர்ஹான் பெஹார்தின் (தென்னாபிரிக்கா) ஆகியோர் இம்மாதம் தமது பங்கேற்பை உறுதி செய்தனர்.

இலங்கை அணியின் நம்பிக்கை தரும் எதிர்காலம்

சிட்னியில் நடைபெற்ற 2015 உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை..

மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார போன்ற ஒருசில முக்கிய விரர்கள் குறித்த திகதியில் தம்மால் பங்கேற்க முடியாது என்பதை குறிப்பிட்டுள்ளனர். எனவே, மிகவும் பொருத்தமான நேரத்தில் இந்த போட்டியை நடாத்துவதற்கு நாம் எதிர்பாத்திருக்கிறோம். இந்த திட்டத்தை நாம் கைவிட்டதாக இதில் அர்த்தம் கொள்ளவில்லை. பெரும் நிறுவனங்களின் அனுசரணையாளர்கள் ஆதரவு தருவதாக உறுதி செய்திருப்பதையும் பாதிக்கப்பட்ட தமது சகோதரர்களுக்கு ஆதரவளிக்க இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் உறுதியளித்திருப்பதையும் நாம் அன்போடு வரவேற்கிறோம் என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டார்.  

இந்திய அணியின் தற்போதைய இலங்கை சுற்றுப் பயணம் வரும் செப்டம்பர் 6 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.