இலங்கை மகளிர் அணிக்கு எதிராக கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று (28) நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, மகளிருக்கான டி-20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
இங்கிலாந்து – இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3 ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (28) நடைபெற்றது.
முதல் டி-20இல் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய இங்கிலாந்து
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன் நாளை (24) கொழும்பில்
இங்கிலாந்துடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக தோற்ற நிலையிலேயே சமரி அட்டபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் களமிறங்கியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவி சமரி அட்டபத்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி, முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து மகளிர் அணி, சிறப்பான ஆரம்பத்துடன் விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில் இங்கிலாந்து மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான எமி ஜோன்ஸ் 57 ஓட்டங்களையும், டெனியல் வொட் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, நடாலி சிவர் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நின்று பதிவு செய்திருந்ததோடு டாமி பூமுன்ட் 42 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இதேநேரம், இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பாக ஓஷதி ரணசிங்க 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
Photos: Sri Lanka Women vs England Women | 3rd T20I
பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 205 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் 3 ஆவது இலக்கத்தில் களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த ஹன்சிமா கருணாரத்ன 44 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் கேட் க்ரொஸ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி, 96 ஓட்டங்களால் அபார வெற்றயீட்டிய இங்கிலாந்து மகளிர் அணி, 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
முன்னதாக இங்கிலாந்து மகளிர் அணி, இறுதியாக இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தது. அதன்பின் 3 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்றது.
மாலிங்கவுடன் மும்பை அணியில் இணைந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி, உபாதைக்குள்ளாகிய
இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்தது.
ஸ்கோர் விபரம்
முடிவு – இங்கிலாந்து மகளிர் அணி 96 ஓட்டங்களால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க