மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் இளம் பந்துவீச்சாளர்

Indian Premier League 2022

186

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் குழாத்தில் புதுமுக சுழல் பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயா சிங் இணைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அர்ஷாட் கானுக்கு உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக குமார் கார்த்திகேயா சிங் இணைக்கப்பட்டுள்ளார்.

குமார் கார்த்திகேயா சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 20 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், மிகுதி உள்ள போட்டிகளில் அணியுடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மாநிலத்தைச்சேர்ந்த குமார் கார்த்திகேயா சிங், 9 முதற்தர போட்டிகள், 19 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 8 T20 போட்டிகளில் விளையாடி முறையே 35, 18 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை IPL தொடரில் மோசமான பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடைத்தை பிடித்துள்ளது. அதேநேரம், தாங்கள் விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான சாதனையை தம்வசப்படுத்தியுள்ளதுடன், அடுத்த போட்டியில் நாளைய தினம் (30) ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<