Home Tamil முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு மோசமான தோல்வி

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு மோசமான தோல்வி

Sri Lanka Women’s Tour of Pakistan 2022

225

பாகிஸ்தான் – கராச்சி சௌதண்ட் கழக மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

ஐசிசியின் 2022-25 பருவகால மகளிர் சம்பியன்ஷிப்புக்கான இலங்கை அணியின் முதல் போட்டியாக நடைபெற்ற, இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>>அவுஸ்திரேலியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

T20I தொடரை இலங்கை அணி 0-3 என இழந்திருந்தாலும், பந்துவீச்சில் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் கொடுத்து போட்டியை சுவாரஷ்யப்படுத்தியிருந்தது. எனினும், இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் மகளிர் அணி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை கவீஷா டில்ஹாரி 6ம் இலக்க வீராங்கனையாக களமிறங்கி ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இவருக்கு அடுத்தப்படியாக பிரசாதினி வீரகொடி 30 ஓட்டங்களையும், சமரி அதபத்து 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் குலாம் பாதிமா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஏற்கனவே இலங்கை மகளிர் அணியின் சிக்கலாக இருக்கும் ஓட்டவேகம் இந்த போட்டியிலும் அணிக்கு சறுக்கியிருந்தது. கவீஷா டில்ஹாரி மாத்திரம் கிட்டத்தட்ட பந்துகள் அளவிற்கு (50) ஓட்டங்களை பெற, ஏனைய வீராங்கனைகளின் ஓட்டவேகம் 70 புள்ளியையும் நெருங்கவில்லை.

ஆனால் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டை விரைவில் இழந்திருந்தாலும், அணித்தலைவி பிஸ்மா மரூப்பின் இறுதிவரையான ஓட்டக்குவிப்பு மற்றும் சிட்ரா அமீனின் 76 ஓட்டங்களின் உதவியுடன் 41.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பிஸ்மா மரூப் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற, இரண்டாவது விக்கெட்டுக்காக மரூப் மற்றும் சிட்ரா ஆகியோர் 143 ஓட்டங்களை பகிர்ந்தனர். பந்துவீச்சில் அச்சினி குலசூரிய மற்றும் ஓசதி ரணசிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Result


Sri Lanka Women
169/10 (47.5)

Pakistan Women
170/2 (41.5)

Batsmen R B 4s 6s SR
Hasini Perera run out (Sidra Nawaz) 4 11 0 0 36.36
Chamari Athapaththu c Muneeba Ali b Sadia Iqbal 25 39 3 1 64.10
Hansima Karunarathne c Bismah Maroof b Ghulam Fatima 12 40 1 0 30.00
Prasadani Weerakkody st Sidra Nawaz b Ghulam Fatima 30 44 3 0 68.18
Nilakshi de Silva c Sidra Nawaz b Sadia Iqbal 16 46 0 0 34.78
Kavisha Dilhari not out 49 50 5 0 98.00
Oshadi Ranasinghe b Ghulam Fatima 0 1 0 0 0.00
Ama Kanchana c Sidra Nawaz b Ghulam Fatima 3 16 0 0 18.75
Sugandika Kumari run out (Sidra Nawaz) 3 12 0 0 25.00
Inoka Ranaweera c Aliya Riaz b Fatima Sana 10 27 0 0 37.04
Achini Kulasuriya lbw b Fatima Sana 0 2 0 0 0.00


Extras 17 (b 0 , lb 3 , nb 0, w 14, pen 0)
Total 169/10 (47.5 Overs, RR: 3.53)
Bowling O M R W Econ
Diana Baig 9 0 37 0 4.11
Fatima Sana 7.5 0 24 2 3.20
Nida Dar 8 0 33 0 4.12
Sadia Iqbal 10 1 30 2 3.00
Ghulam Fatima 10 2 21 4 2.10
Omaima Sohail 2 0 13 0 6.50
Bismah Maroof 1 0 8 0 8.00


Batsmen R B 4s 6s SR
Muneeba Ali c Nilakshi de Silva b Achini Kulasuriya 14 28 2 0 50.00
Sidra Ameen b Oshadi Ranasinghe 76 118 7 0 64.41
Bismah Maroof not out 62 101 4 0 61.39
Omaima Sohail not out 1 4 0 0 25.00


Extras 17 (b 0 , lb 1 , nb 1, w 15, pen 0)
Total 170/2 (41.5 Overs, RR: 4.06)
Bowling O M R W Econ
Sugandika Kumari 4 0 28 0 7.00
Achini Kulasuriya 5 2 13 1 2.60
Ama Kanchana 4 0 10 0 2.50
Oshadi Ranasinghe 8.5 0 35 1 4.12
Inoka Ranaweera 9 0 30 0 3.33
Chamari Athapaththu 4 0 21 0 5.25
Kavisha Dilhari 7 0 32 0 4.57



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<