சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கமாக மாறியிருந்தது. இதனால், மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தில், இரண்டு அணிகளினாலும் மொத்தமாக 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
இதேவேளை, மூன்றாம் நாள் ஆட்டத்தின் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கினை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்று தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
தடுமாறும் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்களா ரொஷேன், திக்வெல்ல?
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்….
கடந்த சனிக்கிழமை (23) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களிலும் மழையின் இடையூறு காணப்பட்டிருந்தால், டெஸ்ட் போட்டியொன்றின் வழமையான நாட்களில் வீசப்படும் ஓவர்களை விட குறைவான ஓவர்கள் வீசுவதற்கே சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. இதன்படி போட்டியின் இரண்டாம் நாள் (24) முடிவில் மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸின் (204) பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 36 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
நேற்று (25) தொடர்ந்த போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் ரொஷேன் சில்வா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரிடமிருந்து பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை எதிர்பார்த்திருந்தது. எனினும், மூன்றாம் நாளுக்கான ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளரான ஷன்னோன் கேப்ரியல் ரொஷேன் சில்வாவினை 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து ஓய்வறை அனுப்பினார்.
ரொஷேன் சில்வாவின் விக்கெட்டினை அடுத்து, நிரோஷன் திக்வெல்ல தவிர்ந்த ஏனைய இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் வேகத்தினை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி தமது விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். இதன்படி, இலங்கை அணி 59 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 154 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்ஸிற்காக பெற்றுக் கொண்டது.
மழை நாளில் மேற்கிந்திய தீவுகளை அச்சுறுத்திய இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள்
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள்..
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 72 பந்துகளினை எதிர்கொண்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் அவ்வணியின் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான ஜேசன் ஹோல்டர் வெறும் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஷன்னோன் கேப்ரியல் 3 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
இதன் பின்னர், இலங்கை அணியினை விட 50 ஓட்டங்கள் முன்னிலையோடு மேற்கிந்திய தீவுகள் அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களினை சமாளிக்க மிகவும் சிரமப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் முன்வரிசை வீரர்கள் மூன்றாம் நாளுக்கான தேநீர் இடைவேளைக்கு முன்னர் 14 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறினர்.
தொடர்ந்த ஆட்டத்தில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் சமாளிக்க முடியாமல் திண்டாடிய அவர்கள் தமது முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரினையும் இழந்து ஒரு கட்டத்தில் 56 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் மோசமானதொரு நிலைக்குச் சென்றனர். இந்த நிலையில், ஒன்பதாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மேற்கிந்திய தீவுகளின் பின்வரிசை வீரர்களான கெமர் ரோச் மற்றும் மிகுவேல் கம்மின்ஸ் ஆகியோர் சிறிது நேரம் போராடி ஓட்டங்களை சேர்த்தனர்.
எனினும், மூன்றாம் நாளுக்கான இராப் போசனத்திற்கு பின்னர் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளின் அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்தியது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணியினர் தமது இரண்டாம் இன்னிங்ஸில் 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர். அவ்வணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களினை (23) இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த கெமர் ரோச் பெற்றிருந்தார். ஏனைய அனைத்து வீரர்களும் 20 ஓட்டங்களை கூட தாண்டவில்லை.
அவ்வணி இந்த இரண்டாம் இன்னிங்ஸில் பெற்றுக் கொண்ட மொத்த ஓட்டங்கள் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் இலங்கை அணிக்கெதிராக பதிவு செய்த மிகக் குறைவான ஓட்டங்களாகவும் அமைந்தது.
மேற்கிந்திய தீவுகளின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து, போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு சவால் குறைந்த 144 ஓட்டங்களே தீர்மானிக்கப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் முன்னிலை வகிப்பதன் காரணமாக, டெஸ்ட் தொடரினை சமநிலை செய்யும் நோக்கோடு இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது.
இப்போட்டியில் சிக்ஸர் ஒன்றினை தடுக்க முயன்ற போது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா உபாதைக்குள்ளாகிய காரணத்தினால், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸில் ஆரம்ப வீரர்களாக தனுஷ்க குணத்திலக்க மற்றும் மஹேல உடவத்த ஆகியோரினை களமிறக்கியது.
டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடப்பதே கனவு என்கிறார் குசல் மெண்டிஸ்
மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிற்கு முன்…
இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மஹேல உடவத்த கேமர் ரோச்சின் பந்துவீச்சில் ஓட்டமேதுமின்றி வெளியேறினார். இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டரின் வேகத்தினை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க (21), தனஞ்சய டி சில்வா (17), ரொஷேன் சில்வா (1), நிரோஷன் திக்வெல்ல (3) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால், வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடும் இலங்கை அணி மூன்றாம் நாளுக்கான ஆட்டநேர முடிவில் 24 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களுடன் தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 63 ஓட்டங்கள் தேவையாக இருக்க, களத்தில் குசல் மெண்டிஸ் 25 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா ஒரு ஓட்டத்துடனும் காணப்படுகின்றனர். இலங்கை அணி போட்டியில் வெற்றி பெற வேண்டும் எனில், இந்த இரண்டு வீரர்களும் நான்காம் நாளுக்கான ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் அசத்தலாக செயற்பட்ட ஜேசன் ஹோல்டர் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு நெருக்கடி தந்திருக்கின்றார். ஹோல்டரின் இந்த சிறப்பான பந்துவீச்சு மேற்கிந்திய தீவுகள் அணியும் போட்டியின் கட்டுப்பாட்டினை இழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஸ்கோர் விபரம்




















