மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஆறாவது மகளிர் T20I உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (10) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட தென்னாபிரிக்க மகளிர் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அயர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி
மகளிர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான..
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் லீக் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டதுடன், இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டன.
இந்தநிலையில், குழு A யிற்கான இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகள் மேற்கிந்திய தீவுகளின் கிரோஷ் இஸ்லேட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி, களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகளான யசோதா மெண்டிஸ் மற்றும் அணித் தலைவி சமரி அத்தபத்து ஆகியோரின் விக்கெட்டுகள் வெறும் 5 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் சரிக்கப்பட, இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறையில் சந்தேகம்
காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான…
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை, அதிகபட்சமாக சஷிகலா சிறிவர்தன 21 ஓட்டங்களையும், விக்கெட் காப்பு வீராங்கனை டிலானி மனோதர ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இவர்களைத் தவிற ஏனைய வீராங்கனைகள் 10 ஓட்டங்களுக்கும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தென்னாபிரிக்க மகளிர் அணியின் பந்து வீச்சில், சப்னிம் இஸ்மைல் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், குறைந்த ஓட்டங்களைக் கொண்டு தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்தும் நோக்கில் பந்து வீசிய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும், 6 ஓட்டங்களுக்கு வீழ்த்தி, நம்பிக்கை அளித்தது. முதல் ஓவரை வீசிய உதேசிகா பிரபோதனி, லவுரா வொல்வார்ட்டின் விக்கெட்டை வீழ்த்த, சிறிபாலி வீரகொடி இரண்டாவது ஓவரில் லைஷெல்லா லீயின் விக்கெட்டை வீழ்த்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட்..
எனினும், இதேபோன்ற அழுத்தத்தை அடுத்தடுத்த ஓவர்களில் இலங்கை அணி கொடுக்கத் தவறியது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட தென்னாபிரிக்க அணி இரண்டாவது விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கியது. மரிஷன்னே கெப் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அணித் தலைவி டென் வென் நீகெர்க் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்படி தென்னாபிரிக்க மகளிர் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றிக்கு காரணமாகிய சப்னிம் இஸ்மைல் போட்டியின் ஆட்ட நாயகியாக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை, இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி, இரண்டு புள்ளிகளுடன் A குழுவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியதுடன், இலங்கை மகளிர் அணி ஒரு புள்ளியுடன் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் அணி, தங்களுடைய அடுத்த லீக் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்வரும் 15ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளவுள்ளது.
போட்டி சுருக்கம்