வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

858
Sri Lanka v Oman - Emerging Asia Cup

ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம் (ACC) வளர்ந்து வரும் வீரர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் ஆசியக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை 109 ஓட்டங்களால் அபாரமாக வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்…

எட்டு அணிகள் பங்குபெறுகின்ற இம்முறைக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது.

தொடரில் பங்குபெறும் எட்டு அணிகளும் A, B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறும் நிலையில், குழு A இல் காணப்படுகின்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி, ஒமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை எதிர்கொண்ட போட்டி இன்று (7) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

Photos: Sri Lanka vs Oman – ACC Emerging Asia Cup 2018

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

இதன்படி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு முன்வரிசை வீரர்களாக வந்த அவிஷ்க பெர்ணாந்து மற்றும் ஹசித போயகொட ஆகியோர் அரைச்சதங்களின் மூலம் வலுச்சேர்த்தனர். இதில் ஹசித போயகொட 94 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றிருக்க, அவிஷ்க பெர்னாந்து 9 பெளண்டரிகளுடன் 56 ஓட்டங்களை குவித்திருந்தார்.

துடுப்பாட்டத்தில் பிரகாசித்த குசல் மெண்டிஸ் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில்…

இதனை அடுத்து மத்திய வரிசையில் களமிறங்கிய கமின்து மெண்டிஸ் மற்றும் சம்மு அஷான் ஆகியோர் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியினை தமது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் மேலும் பலப்படுத்தினர்.

இவர்களின் அதிரடியோடு இலங்கை தரப்பு 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.  இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிரடியான முறையில் செயற்பட்ட கமிந்து மெண்டிஸ் 62 பந்துகளில் 75 ஓட்டங்களை விளாச, சம்மு அஷான் வெறும் 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: India vs Afghanistan | ACC Emerging Asia Cup 2018

மறுமுனையில் ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக ஜெய் ஓடட்ரா 3 விக்கெட்டுக்களையும், பிலால் கான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 325 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களுக்கு 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

>> ஐக்கிய அரபு இராச்சிய மண்ணில் வரலாறு படைத்த நியுசிலாந்து அணி

ஓமான் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜடின்தர் சிங் 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், ஷெஹான் மதுசங்க மற்றும் சம்மு அஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி தமது அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்து வரும் அணியினை நாளை (8) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 109 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<