“வெற்றியுடன் மாலிங்கவுக்கு பிரியாவிடை வழங்க வேண்டும்” – திமுத்

3179

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க நாளை நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கவுள்ளார். 

இந்தநிலையில், நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் வெற்றியினை பெற்று மகிழ்ச்சியுடன் அவருக்கு (மாலிங்கவுக்கு) விடைகொடுக்க எதிர்பாரத்துள்ளதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதல் எவ்வாறு அமையும்?

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற 2019ஆம்….

நாளை நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (25) நடைபெற்ற போதே திமுத் கருணாரத்ன குறித்த விடயத்தினை தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மாலிங்கவின் கடைசி ஒருநாள் போட்டி என்பதால், அவருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக வீரர்கள் ஹோட்டலில் சில ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், ஹோட்டல் நிர்வாகம் மற்றும் போட்டிக்கு பின்னதான பிரியாவிடை நிகழ்வுகளும் இருக்கின்றன.

ஆனால், இவற்றை விடவும் நாம் மாலிங்கவுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த விடயம் போட்டியில் வெற்றிபெற்று அவரை வழியனுப்பி வைப்பதுதான். அவரது இறுதிப்போட்டி என்பதால் அனைவரும் மகிழ்ச்சியுடனும், போட்டியின் வெற்றியுடனும் இருந்தால் அவரது இறுதி ஒருநாள் போட்டி மிகச்சிறப்பாக இருக்கும். அதனால், போட்டியில் வெற்றிபெறுவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தியுள்ளோம்”

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் எத்தகைய மாற்றங்கள் இருக்கும் என்பதனை தெளிவுப்படுத்திய திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணத்தில் அதிகம் பேசப்பட்ட 6வது இடத்தில் பெரிதான மாற்றங்கள் இருக்காது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

“முதல் போட்டியில் நாம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த சிந்திக்கவில்லை. உலகக் கிண்ணத்தில் விளையாடிய பதினொருவருக்கும், நாளைய போட்டிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்காது. 

அதேநேரம், 6வது இடத்தில் நாம் பந்துவீச்சாளரை விடவும், துடுப்பாட்ட வீரர் ஒருவரை களமிறக்க எண்ணியுள்ளோம். குறிப்பாக லஹிரு திரிமான்னே அந்த இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது. காரணம், எமது 6வது பந்துவீச்சாளருக்கு ஓரிரு ஓவர்களே வீசவேண்டி இருக்கும் என்பதால் இந்த மாற்றம் எமக்கு உதவும் என எதிர்பார்க்கிறோம்”

“எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர” – மாலிங்க பெருமிதம்!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியுடன் ஒருநாள்….

இதேவேளை, இலங்கை அணியில் அதிக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். குறிப்பாக குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் உள்ளனர். அதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றங்கள் இருக்குமா? என்பது தொடர்பிலும் திமுத் கருணாரத்ன தெளிவுப்படுத்தினார்.

“ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மூவர் உள்ளோம். அதுமாத்திரமின்றி நானும், குசல் பெரேராவும் இடதுகை துடுப்பாட்ட வீரர்கள். பங்களாதேஷ் அணியில் வலதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதன் காரணமாக அவிஷ்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வருவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நாளை (26) பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க