தொடர் தோல்விகளுக்கு அதிரடி வெற்றியுடன் முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

1478
Image Courtesy - BCCI

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியிருப்பதுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் புதிய தலைவர் திசர பெரேரா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தார்.

இந்த வருடத்தில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை அணி, இறுதியாக தாம் விளையாடிய 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தோடு சேர்த்து இலங்கை, இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என பறிகொடுத்திருந்தது.

எனினும், இந்திய அணியுடன் இறுதியாக டெல்லியில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டி இலங்கை அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக அமைந்திருந்த காரணத்தினால் இந்திய அணியுடனான இந்த ஒரு நாள் போட்டியிலும் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து புதிய அணித்தலைவருடன் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து காயம் காரணமாக தனஞ்சய டி சில்வா விலக இலங்கை அணியை கடந்த காலத்தில் பல போட்டிகளில் வெற்றியாளராக மாற்றிய அசேல குணரத்ன தனது காயங்களில் இருந்து பூரண குணமடைந்து நான்கு மாதங்களின் பின்னர் அணிக்கு திரும்பியிருந்தார்.

மறுமுனையில் விராட் கோஹ்லிக்கு இலங்கையுடனான ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதனால் இந்திய அணி ரோஹித் சர்மாவினால் வழிநடாத்தப்பட்டிருந்ததோடு இளம் துடுப்பாட்ட வீரரான ஸ்ரேயாஸ் ஐயரையும் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் அறிமுகப்படுத்தியிருந்தது.

உபாதையிலிருந்து மீண்டு வந்த அசேலவின் அடுத்த எதிர்பார்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற நட்சத்திர வீரராக…

தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா, அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை தொடங்கியிருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் இந்திய அணியின் முதல் விக்கெட்டை மூன்றாம் நடுவரின் உதவியோடு அஞ்செலோ மெதிவ்ஸ் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டாக  சிக்கர் தவான் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடக்க இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா, அணித்தலைவர் ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை தொடங்கியிருந்தது. போட்டியின் இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்தில் இந்திய அணியின் முதல் விக்கெட்டை மூன்றாம் நடுவரின் உதவியோடு அஞ்செலோ மெதிவ்ஸ் கைப்பற்றினார். இந்திய அணியின் முதல் விக்கெட்டாக  சிக்கர் தவான் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடக்க இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்படியானதொரு தருணத்தில் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் மற்றும் மஹேந்திர சிங் தோனி ஆகியோர் சிறிது நேரம் போராட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு 8 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 41 ஓட்டங்களைச் சேர்த்தனர். இவர்களின் இணைப்பாட்டம் அகில தனஞ்சயவினால் முடிவுக்கு கொண்டு வரப்பட 19 ஓட்டங்களுடன் குல்தீப் யாதவ்வின் இன்னிங்ஸ் நிறைவடைந்தது.

இதனையடுத்து மீண்டும் போராடிய தோனி அரைச்சதம் ஒன்றுடன் இந்திய அணியின் மொத்த ஓட்டங்களை நூறை தாண்ட வைத்தார். முடிவில் தோனியின் விக்கெட்டும் வீழ்த்தப்பட 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்தியா 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இதில் இந்திய அணிக்காக இறுதிவரை போராடிய மஹேந்திர சிங் தோனி தனது 67 ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 87 பந்துகளுக்கு 10  பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட சுரங்க லக்மால் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்ததோடு,  நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளை சாய்த்து பலம்மிக்க இந்திய அணியைக் கட்டுப்படுத்துவதில் உதவியிருந்தார்.

உபாதைகள், உடல் அவஸ்தைகளால் பாதிப்படையும் இலங்கை அணி

டெல்லியில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் ஹீரோவாக மாறியிருந்த தனன்ஞய…

இதனையடுத்து 50 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலகு வெற்றி இலக்கான 113 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை, முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரைப் பறிகொடுத்த போதிலும் 20.4 ஓவர்களில் 114 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.

இலங்கை அணி இந்த வெற்றி இலக்கை அடைவதற்கு, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த உபுல் தரங்க 46 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 49 ஓட்டங்களைப் பெற்று உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவரோடு சேர்த்து தங்களது பங்கிற்கு நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் தமது அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்த பிரபல்யமான வெற்றியுடன் இலங்கை அணி ஒரு நாள் போட்டிகளில் தமது தொடர்ச்சியான (12) தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இன்றைய நாளில் சிறந்த பந்து வீச்சை வெளிக்காட்டிய வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கு வழங்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மொஹாலியில் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 போட்டியின் சுருக்கம்

Scorecard

போட்டி முடிவு இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி