தொடர் முடிவுக்காக இறுதிப் போட்டியை எதிர்பார்க்கும் இலங்கை – பங்களாதேஷ் இளம் அணிகள்

136
Bangladesh U19 Tour of Sri Lanka

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையிலான இளையோர் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி கடும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டிருந்தது.

ஒரு நாள் தொடரை தக்கவைத்த இலங்கை இளையோர் அணி

சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19…

இப்படியானதொரு நிலையில் இளையோர் ஒரு நாள் தொடரின் ஏனைய இரண்டு போட்டிகளும் கடந்த வாரம் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நிறைவடைந்தன. நிறைவடைந்த போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்து இளையோர் ஒரு நாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்த பின்னர் இரண்டு இளம் அணிகளுக்கும் இடையிலான நான்காவது இளையோர் ஒரு நாள் போட்டி கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் இன்று (6) மீண்டும் கைவிடப்பட்டிருக்கின்றது.

இன்று விளையாடப்பட்ட ஓவர்களில் முதலில் இலங்கை வீரர்களால் துடுப்பாடப் பணிக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு 22 ஓவர்களுக்கே துடுப்பாட முடியுமாக இருந்தது. பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி விளையாடிய ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை குவித்தது. அவ்வணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தவ்ஹீத் ரித்தோய் அரைச்சதம் தாண்டி 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இதேநேரம், இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான ரோஹான் சஞ்சய 29 ஓட்டங்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தோடு, ரவீன் டி சில்வா 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்.

அறிமுக வீரர் அசத்த சரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து

சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே…

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 8.5 ஓவர்களே விளையாடியது. குறிப்பிட்ட இந்த ஓவர்களில் மோசமான துடுப்பாட்டத்தை காண்பித்த இலங்கையின் இளம் வீரர்கள் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலை ஒன்றில் காணப்பட்டிருந்த போதே ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. ஏற்கனவே, அரைச்சதம் விளாசிய பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணியின் தலைவர் தவ்ஹீத் ரித்தோய் இம்முறை பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையினை வெளிக்காட்டியிருந்தார்.

இளையோர் ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டி முடிவினால் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் 1-1 என தொடர்ந்து சமநிலையிலேயே காணப்படுகின்றது. எனவே, தொடரில் வெற்றி பெறும் அணி எது என்பதை கட்டுநாயக்கவில் வெள்ளிக்கிழமை (9)  நடைபெறும் ஐந்தாவதும் இறுதியுமான இளையோர் ஒரு நாள் போட்டியே தீர்மானிக்கும்.

ஸ்கோர் விபரம்  

பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி – 155/6 (22) தவ்ஹீத் ரித்தோய் 59*, ரோஹான் சஞ்சய 3/29, ரவீன் டி சில்வா 2/14

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி – 34/5 (8.5) தவ்ஹீத் ரித்தோய் 3/08

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<